வெள்ளி, 26 மே, 2017

ரஜினியின் ஆஸ்ரம் பள்ளிகூட சிஸ்டம் ரொம்பவே மோசம் .. Flashback நில அபகரிப்பு .. சம்பள பாக்கி ... ஒரு ஓட்டுனர் இறந்தே விட்டார் ...



ரஜினிக்கு சொந்தமான ‘தி ஆஸ்ரம்’ பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அவ்வப்போது சம்பள பாக்கியை வைத்துவிடுகிறதாம் நிர்வாகம். இந்த விஷயத்தை அமுக்கி பாதுகாத்து, அறைக்குள்ளேயே சால்வ் பண்ண வேண்டியவர்கள் அதை செய்யாமல் விட்டதால், வெட்ட வெளியில் பற்றிக் கொண்டது. ஆசிரியர்கள் சிலர் பள்ளி வாயிலின் முன் நின்று போராட்டம் நடத்துகிற அளவுக்கு போய் விட்டது நிலைமை. எல்லா ஊடகங்களிலும் செய்தி வர... செய்வதறியாமல் நிற்கிறார்களாம் இப்போது. ரஜினி படம் வந்தாலும் வசூல் பாக்கி பிரச்சனை. ரஜினியின் பள்ளிக்கூட விஷயத்திலும் சம்பள பிரச்சனை. என்னாச்சு சார் உங்களுக்

தி ஆஸ்ரம் மெட்ரிக்குலேசன் பள்ளியை நிர்வகிக்கும், ஸ்ரீ ராகவேந்திரா கல்விச் சங்கத்தின் செயலாளர் லதா ரஜினிகாந்த், நிர்வாக அறங்காவலர் ரஜினிகாந்த், ஆஸ்ரம் பள்ளியின் முதல்வர் ஆகியோர் ஜனவரி 25-ந்தேதி நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று கடந்த 12-ந்தேதி தமிழ்நாடு மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இணை இயக்குனர் உத்தரவு பிறப்பித்தார். ஜனவரி 29, 2016, 05:00 AM சென்னை, தி ஆஸ்ரம் மெட்ரிக்குலேசன் பள்ளி அமைந்துள்ள நிலம் தொடர்பான பிரச்சினையில் கல்வி அதிகாரி முன்பு நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த் ஆகியோர் 2 வாரத்துக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

நிலப்பிரச்சினை சென்னை கிண்டியில் நடிகர் ரஜினிகாந்துக்கு சொந்தமான ‘தி ஆஸ்ரம் மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் நிலம் தொடர்பாக ஐகோர்ட்டில், வெங்கடேசவரலு என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்து ஐகோர்ட்டு கடந்த ஆண்டு நவம்பர் 18-ந் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரர் வெங்கடேசவரலு மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனரிடம் நிலம் தொடர்பாக புகார் செய்யலாம். அவ்வாறு புகார் செய்யும் பட்சத்தில், அதை சட்டப்படி 8 வாரத்துக்குள் விசாரித்து மெட்ரிக்குலேசன் பள்ளி இயக்குனர் தகுந்த உத்தரவை பிறப்பிக்கவேண்டும்’ என்று கூறியது.

இந்த உத்தரவின் அடிப்படையில், வெங்கடேசவரலு கல்வித்துறை அதிகாரியிடம் புகார் செய்தார். ரஜினிகாந்துக்கு நோட்டீசு இந்த புகார் குறித்து விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக, தி ஆஸ்ரம் மெட்ரிக்குலேசன் பள்ளியை நிர்வகிக்கும், ஸ்ரீ ராகவேந்திரா கல்விச் சங்கத்தின் செயலாளர் லதா ரஜினிகாந்த், நிர்வாக அறங்காவலர் ரஜினிகாந்த், ஆஸ்ரம் பள்ளியின் முதல்வர் ஆகியோர் ஜனவரி 25-ந்தேதி நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று கடந்த 12-ந்தேதி தமிழ்நாடு மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இணை இயக்குனர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து தி ஆஸ்ரம் பள்ளியின் முதல்வர் வந்தனா, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அதிகாரம் கிடையாது அப்போது பள்ளி முதல்வர் சார்பில் மூத்த வக்கீல் நளினி சிதம்பரம் ஆஜராகி, ‘ஒரு பள்ளிக்கூடத்தின் இடப்பிரச்சினை தொடர்பாக விசாரணைக்கு நேரில் வரும்படி மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இணை இயக்குனர் நோட்டீசு அனுப்ப அதிகாரம் கிடையாது’ என்று வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி, ‘பள்ளி இடப்பிரச்சினை தொடர்பாக விசாரணை நடத்த இணை இயக்குனர் நோட்டீசு அனுப்பியுள்ளார். அதன்படி, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். அது பள்ளி நிர்வாகத்தின் கடமை. அதற்காக அந்த உத்தரவையே ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர முடியாது. இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், பள்ளி முதல்வர் வந்தனா ஆகியோர் நேரில் ஆஜராக கால அவகாசம் கேட்கலாம்‘ என்று வாதிட்டார்.
ஆஜராக வேண்டும் இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி சுந்தரேஷ், ‘நேரில் ஆஜராகவேண்டும் என்று இணை இயக்குனர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது. ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், பள்ளி முதல்வர் வந்தனா ஆகியோர் 2 வாரத்துக்குள் இணை இயக்குனர் முன்பு ஆஜராகி, தங்கள் பள்ளி நிலம் குறித்து எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கவேண்டும். அவ்வாறு விளக்கம் அளித்த பின்னர் 8 வாரத்துக்குள் சட்டப்படி தகுந்த உத்தரவை மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இணை இயக்குனர் பிறப்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.
சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ளது தி ஆஸ்ரம் என்ற பள்ளிக்கூடம். சாஸ்திரத்துக்குக் கூட ஏழைகள் தலையை நுழைக்க முடியாத இந்த பள்ளியை சூப்பர் ஸ்டார் ரஜினியின் மனைவி லதா ரஜினிதான் நடத்தி வருகிறார். நாம் இந்த தகவலை வெளியிட்டு சுமார் இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இப்போது அதே நிலை தொடர்ந்தால் அதை என்னவென்று சொல்வது? அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் உட்பட யாருக்கும் சரிவர சம்பளம் கொடுப்பதில்லையாம் அவர்கள். பொறுத்து பொறுத்துப் பார்த்தவர்கள், போராட்டத்தில் குதித்துவிட்டார்கள்.
1200 மாணவர்கள் படிக்கும் இப்பள்ளியில் 75 டீச்சர்கள், 26 வேன் டிரைவர்கள், மற்றும் சில பணியாட்கள் வேலை செய்து வருகிறார்களாம். இவர்கள் அத்தனை பேருக்குமே சம்பள பிரச்சனை. பேச்சு வார்த்தை ஏதும் எடுபடாமல் போனதால், உள்ளிருப்பு போராட்டத்தில் குதித்துவிட்டார்கள். நிலைமை சீரடையாததால் பள்ளி கல்வித்துறையிடம் புகார் கொடுக்க கிளம்பிவிட்டார்கள்.
இவை எல்லாம் சென்ற வருட செய்தி.. பெரும் பத்திரிகைகளும் இதர தொலைகாட்சி ஊடகங்களும் இருட்டடிப்பு செய்கின்றன . இன்னும் பல சட்ட மீறல் விடயங்கள் அங்கு நடப்பதாக நம்புவதற்கு முகாந்திரம் உள்ளது

கருத்துகள் இல்லை: