
marx.anthonisamy பா.ஜ.க ஆட்சியில் இந்தியா எத்தனை கோடூரமான நிலைக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இன்றைய காஷ்மீர் ஒரு எடுத்துக்காட்டு.
ஒரு 24 வடது இளைஞனை இராணுவ வாகனத்தின் முகப்பில் கட்டிக் கொண்டு மனிதக் கேடயம் தரித்துப் போன மேஜர் லீதுல் கோகோய் என்னும் ஒரு இராணுவகொடூரனுக்கு இந்திய இராணுவம் விருது அளிப்பதும், அதை பா.ஜ.கவின் இராணுவ அமைச்சர் அருண் ஜேட்லியும் காஷ்மீரின் துணை முதலமைச்ச (இந்த ஆளும் ஒரு பாஜக) "புத்திசாலித்தனமான நடவடிக்கை" எனப் பாராட்டுவதும் நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டுகள். இதன்மூலம் அவர்கள் சொல்ல வரும் சேதி என்ன? "இராணுவம் என்ன வேண்டுமானாலும் செய்யும். அதை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை. எவ்வளவு கோடூரமாக மக்கள் நடத்தப்படுகின்றனரோ அத்தனை உயர் விருதுகள் அந்தக் கோடூரன்களுக்குத் தரப்படும்... இதுதானே? அவர்கள் மிருகமாக இருப்பது மட்டுமல்ல.. இவை அத்தனையையும் சகித்துக் கொண்டு புல்லையும் புண்ணாக்கையும் தின்று கொண்டிருக்கும் நம்மையும் அவர்கள் மிருகங்களாக மாற்றிக் கொண்டுள்ளனர்
http://www.gulf-times.com/story/549833/Indian-army-commends-Kashmir-human-shield-officer
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக