செவ்வாய், 23 மே, 2017

செல்லூர் ராசு : 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய முடியாது

5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் பெரிய விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய முடியாது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களிடம் மேலும் பேசிய அவர், தமிழ்நாடு கூட்டுறவு இணையத்தின் கீழ் செயல்படும்படும் குளிர்பதனக் கிடங்கில், 12 அடுக்குகளில் காய்கறி, பழங்கள், பூக்களை பாதுக்காத்து வைத்து கொள்ள முடியும். குளிரூட்டியால் வழங்கப்படும் குளிர்ச்சியை, அறைகள் தக்க வைத்து கொள்ள வசதியாக சுவர்களில் தெர்மாகோல் மூலம் ஏற்பாடுகள் செய்யப்படும். உர வினியோகம் தங்கு தடையின்றி நடைபெற்று வருகிறது என்றும், 2006ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை, 5 ஆயிரத்து 318 கோடி ரூபாய் விவசாயக் கடன் தள்ளுப்படி செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு துறையில் விவசாய கடன் தொடர்பான பிரச்சனை ஏதும் எழவில்லை. தேர்தல் வாக்குறுதிபடி சிறு-குறு விவசாயிகள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறினார். முன்னதாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள குளிர்பதன கிடங்கு 2 கோடியே 15 லட்ச ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட உள்ளது. செண்பகபாண்டியன் நக்கீரன்

கருத்துகள் இல்லை: