மின்னம்பலம் - Mathi : கேரளா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் CPI(M) கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் தமது 101 வயதில் இன்று ஜூலை 21-ந் தேதி காலமானார். Achuthanandan CPI(M)
இந்தியாவின் மூத்த இடதுசாரித் தலைவரான அச்சுதானந்தனுக்கு வயது 101. கேரளா மாநிலத்தில் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை முதல்வராக பதவி வகித்தவர்.
திருவனந்தபுரத்தில் தமது வீட்டில் இருந்த போது கடந்த ஜூன் 23-ந் தேதி அச்சுதானந்தனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதனையடுத்து அவர் திருவனந்தபுரம் Sree Uthradom Thirunal மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று பிற்பகல் அச்சுதானந்தன் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது. இதனையடுத்து கேரளா முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களை சந்தித்தனர். இதன் பின்னர் அச்சுதானந்தன் காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஓய்வறியா இடதுசாரி போராளி அச்சுதானந்தன் வரலாறு
1923-ம் ஆண்டு அக்டோபர் 20-ந் தேதி கேரளாவின் ஆழப்புழா மாவட்டம் பாரவூரில் பிறந்தவர்.
தமது 11 வயதில் தாய்- தந்தை இருவரையுமே இழந்தவர். இதனால் 7-ம் வகுப்புடன் கல்வியை நிறுத்தினார்.
தமது 15 வயதில் 1938-ம் ஆண்டு கேரளா காங்கிரஸில் இணைந்து அரசியலில் காலடி தடம் பதித்தார்
17 வயதில் 1940-ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் அச்சுதானந்தன் இணைந்தார். தொழிற்சங்கங்களை வளர்த்தெடுப்பதில் தீவிரமாகப் பணியாற்றினார்.
நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று 5 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்
கேரளாவின் புன்னப்பரா- வயலார் எழுச்சி போராட்டத்தில் மிக முக்கிய பங்கு வகித்தார்.
1964-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டு CPI(M) கட்சி உருவாக அடித்தளமாக இருந்த 32 பேரில் விஎஸ் அச்சுதானந்தன் ஒருவர்.
சிபிஎம் கட்சியின் கேரளா மாநில செயலாளராகப் பணியாற்றினார்
கேரளா சட்டமன்ற உறுப்பினராக 7 முறை பதவி வகித்தார்
சிபிஎம் கட்சியின் மத்திய குழு- பொலிட் பீரோ உறுப்பினராக 1985-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை இடம் பெற்றிருந்தார்.
கேரளா சட்டமன்றத்தில் நீண்டகாலம்- 15 ஆண்டுகள் எதிர்கட்சித் தலைவராக பதவி வகித்தவர்
2016-2021-ல் கேரளா நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் தலைவராக பதவி வகித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக