திங்கள், 29 ஆகஸ்ட், 2016

நில அபகரிப்பு வழக்கில் ரஜினி! ஐ நா சமாதான தூதராக ரஜினியின் மகள் ஐஸ்வர்யா நியமனம் .. .. தகுதி???

Nepotism definition, patronage bestowed or favoritism shown on the basis of family relationship, as in business and politics:
கர்நாடக அரசாங்கத்தையே அதிர வைத்திருக்கிறது ஒரு நில அபகரிப்பு வழக்கு. நிலத்தை அபகரித்ததாக சொல்லப்படுவது, கர்நாடகாவின் தலைமைச் செயலாளர் அரவிந்த ஜாதவ்வின் 85 வயதான தாயார் தாராபாய். இந்த வழக்கின் ஆணிவேரைப் பிடிக்க நாம் 31 வருடங்கள் பின்னோக்கிச் செல்ல வேண்டியதிருக்கிறது. 28.02.1985லிருந்து 02.09.1985க்குள் தாராபாய், ரூபாய் 48,00 மதிப்புள்ள 16 ஏக்கர் மற்றும் 10 குண்டாஸ் விவசாய நிலத்தை தேவனஹல்லி தாலுகாவில் உள்ள குண்டனா ஹோப்லி என்ற ஊரில் வாங்கியிருக்கிறார். ,  ஐக்கிய நாடுகள் சபை  ஐஸ்வர்யா ரஜினி தனுஷை  நல்லெண்ண தூதராக நியமித்துள்ளது. தென்னிந்திய பெண்களின் நிலையை சர்வதேச சமூகத்திற்கு கொண்டு செல்வது, அவர்களின் உரிமைக்காக ஐ.நா. சபையில் குரல் கொடுப்பது போன்ற பணிகளை ஐஸ்வர்யா மேற்கொள்வார். இந்த நியமன ஆணை வழங்குவதற்கான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் தனுஷ், லதா ரஜினி காந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்திய பெண் ஒருவர் இந்த பதவியை பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஐ நாவின் அடுத்த சமாதான தூதுவராக கமலஹாசனின் மகள்  சுருதி அல்லது அக்ஷாரா நியமிக்கப்படுவார். கடந்த பத்து பத்து ஆண்டுகளாக இந்த இரண்டு குடும்ப பெண்கள்தான் மீடியா சேவையாளர்கள் 
அதன் பிறகு 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விவசாய நிலம், பெங்களூரின் குடியிருப்புப் பகுதியாக கர்நாடக குடியிருப்பு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டு, அடுத்த வருடத்தில் லட்சத்துக்கு விற்கப்பட்டிருக்கிறது. மீண்டும் சில நிலங்களை தாராபாய் வாங்குகிறார். குடியிருப்பு வாரியம் விவசாய நிலத்தை, குடியிருப்புப் பகுதியாக அங்கீகரிக்கிறது. ரூபாய் 5 லட்சத்துக்கு விற்கிறார். இப்படியே 1997 முதல் 2001 வரை விற்கப்படும் நிலங்களின் மூலம் தாராபாய்க்கு லாபம் மட்டும் ரூபாய் 82.52 லட்சம் கிடைத்திருக்கிறது. அநேகமாக இதில் நடைபெற்றிருக்கும் ஊழல் உங்களுக்கு இந்நேரம் புரிந்திருக்கலாம். மேலும் பார்ப்போம்.
கர்நாடக அரசியலமைப்புச் சட்டப்படி, அதாவது விவசாயிகளின் நிலம் காக்கும்பொருட்டு, ரூபாய் 2 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு விவசாய நிலங்கள் விற்பதும், வாங்குவதும் பிரிவு 79(b) படி குற்றம். அதிலும், அந்த விவசாய நிலத்தை கமர்ஷியல் நிலமாக மாற்றி விற்பனை செய்து, அதன் மூலம் லட்சங்களில் லாபம் பார்ப்பது பிரிவு 79(a) படி குற்றம். மருத்துவச் செலவுக்கும், அன்றாட செலவுக்குமே தனது மகன் அரவிந்த ஜாதவ்வை நம்பியிருக்கும் தாராபாய்க்கு வருமானம் ரூபாய் 2 லட்சத்துக்கு மேல் இல்லை என்றாலும், விலைக்கு வாங்கிய விவசாய நிலத்தில் சாகுபடி செய்யாதபோதே, அந்த நிலத்தை வைத்திருக்கும் உரிமையை தாராபாய் இழந்துவிடுவது, 79(a), 79(b) பிரிவுகள் தெளிவாக விளக்குகின்றன. அத்துடன் தேவனஹல்லியில் வாங்கிய அனைத்து நிலங்களையும் விற்றுவிட்டு, ராமாணய கனஹல்லி என்ற ஊரில் அதே 16 ஏக்கர் மற்றும் 10 குண்டாஸ் நிலத்தை வாங்கி, தேவனஹல்லியில் செய்ததையே திரும்பச் செய்திருக்கிறார் தாராபாய்.
இப்படியாக தாராபாய் பெயரில் தொடங்கிய குற்றச்சாட்டுகள், கடைசியில் அரவிந்த் ஜாதவ்விடம் வந்து நின்றிருக்கின்றன. ஆரம்பத்திலேயே அரவிந்த ஜாதவ் பெயர் உள்ளே வராததற்குக் காரணம், அவரது பதவியும் அவருக்கு எதிராக ஆதாரங்கள் ஏதும் கிடைக்காததுதான். அரவிந்த ஜாதவ்வின் தலைமைச் செயலாளர் பதவி, செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. ஆறு மாதத்துக்கு முன்பே முடிந்த தனது பதவியை, ஆறு மாதம் நீட்டித்துக்கொண்டு பதவியில் அரவிந்த ஜாதவ் இருந்ததற்குக் காரணம் என்ன என்பது மேலும் அதிர்ச்சிகரமான தகவல்.
இந்த ஆறு மாதத்திலும், அரவிந்த ஜாதவ் தனது தாய் பேரில் இருக்கும் இடங்களின் டாகுமெண்ட்களை க்ளியர் செய்யும் வேலையை தனது உதவியாளர் மூலமாக செய்து வந்திருக்கிறார். அதாவது, அரசு அலுவலகங்களின் வேலை நேரம் முடிந்த பிறகு பல டாகுமெண்ட்களை எடுத்து சரிபார்த்து, இவர்களுக்குச் சாதகமாக தகவல்கள் இருக்க எந்த மாதிரியான மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதை முடிவெடுத்து வந்திருக்கிறார் அவரது உதவியாளர். மேலும், இதற்காக ஒரு பிரத்யேக வாட்ஸ் அப்குரூப் உருவாக்கி, அதில் பிரச்னை வராமலிருக்க டாகுமெண்ட்களில் எந்த மாதிரியான மாற்றங்களை செய்ய வேண்டும் என்பது விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இப்படி ஒவ்வொரு விஷயமாக வெளியாக வெளியாக, கர்நாடக முதல்வர் சித்தராமய்யாவுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது.
ஆனாலும், எந்த அவசர முடிவும் எடுக்கவேண்டாம் என்று கூறிய சித்தராமையா ஒரு டீமை உருவாக்கி, என்ன நடந்தது என்பதை விசாரிக்கச் சொல்லியிருக்கிறார். விசாரணை முடிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் அரவிந்த ஜாதவ்வை தண்டிக்கும் வரையறை கர்நாடக அரசுக்கு இல்லை. மத்திய அரசு தலையிட்டு இதை விசாரித்து தக்க நடவடிக்கைகளை எடுக்க முடியும். வேண்டுமென்றால், அரவிந்த ஜாதவ்வை விடுப்பில் வீட்டுக்குப் போகச் சொல்லி அறிவுறுத்த சித்தராமய்யாவுக்கு வாய்ப்பு இருக்கிறது. மற்றபடி கர்நாடக அரசால் அரவிந்த ஜாதவ்வை எதுவும் செய்ய முடியாது எனும் நிலையில்தான், நிலத்தை வாங்கிய மற்றவர்கள் கணக்கில் வருகிறார்கள்.
அந்த லிஸ்ட்டில் நடிகர் ரஜினிகாந்தும் இருக்கிறார். ஏனென்றால், தேவனஹல்லி பகுதியில் கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் வரக்கூடிய இரண்டு நிலங்களை ரஜினி வாங்கியிருக்கிறார். அரவிந்த ஜாதவ் தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் மற்ற நிலதாரர்கள் தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது. இல்லையென்றால் விவசாய நிலத்தை குடியிருப்பு நிலமாக மாற்ற முயன்ற குற்றத்தில், நிலத்தை வாங்கியவர்கள் நீதிமன்றத்துக்கு வரவழைக்கப்படவும் வாய்ப்புகள் இருக்கின்றன. சட்டம் என்பதும்,அதில் உள்ள ஓட்டைகள் என்பதும் எப்போதும் வாய்ப்புகளை உருவாக்கித் தருபவை தானே.   minnambalamcom

கருத்துகள் இல்லை: