வெள்ளி, 2 செப்டம்பர், 2016

இன்ஸ்பெக்டர் காஞ்சனா ! இப்படித்தான் அலட்சியமாக இருப்பீங்களா..’ என அதிகாரிகளுக்கு முதல்வர் டோஸ்

அதைப்படித்த ஃபேஸ்புக், ஸ்டேட்டஸ் ஒன்றை டைப்பிங் செய்ய ஆரம்பித்தது. "சட்டமன்றத்தில் ஜெயலலிதா பேசிக்கொண்டிருந்த நேரத்தில், திருவெற்றியூர் இன்ஸ்பெக்டர்காஞ்சனா கையில் மண்ணெண்ணெய் கேனை எடுத்தபடி அவைக்கு வெளியே தன்மீது ஊற்றி தீ வைத்துக்கொள்ள முயன்று இருக்கிறார். அவரை சக அதிகாரிகள்மீட்டுவிட்டனர். கொஞ்சம் கவனிக்காமல் விட்டிருந்தால், பேரவைக்குள் நுழைந்திருப்பார் காஞ்சனா. சட்டமன்றத்தில் இருந்த முதல்வர் கவனத்துக்கு இந்தத் தகவல்உடனடியாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. ‘எதுக்காக அப்படி செஞ்சாங்கன்னு விசாரிங்க.. இப்படித்தான் அலட்சியமாக இருப்பீங்களா..’ என அதிகாரிகளுக்கு டோஸ்விழுந்திருக்கிறது.
பாதுகாப்புப் பணி என்ற பெயரில் தொடர்ந்து காஞ்சனாவுக்கு அதிகாரிகள் சிலர் டார்ச்சர் கொடுத்திருக்கிறார்கள். விடுப்புக் கொடுக்காமல் வெயிலில்நிற்கவைத்த கொடுமைகளும் அரங்கேறியுள்ளது. இதையெல்லாம் விசாரணையின்போது காஞ்சனா சொல்லியிருக்கிறார். ஆனால் அவரை விசாரித்த அதிகாரிகளோ,‘இப்படியெல்லாம் சொன்னால் சி.எம். கோபமாகிடுவாங்க. குடும்பப் பிரச்னையில இப்படி செஞ்சுட்டேன்னு எழுதிக் கொடுத்திடும்மா…’ என நெருக்கடி கொடுக்கஆரம்பித்திருக்கிறார்களாம். இப்போதாவது உண்மை வெளியே வருமா? என்பதுதான் தெரியவில்லை." மின்னம்பலம்.com

கருத்துகள் இல்லை: