சனி, 3 செப்டம்பர், 2016

ஸ்ரீதர் தனபாலன் கைது.. தமிழ்நாட்டி தாவூத் இப்ப்ரஹீம் இவன்தான்?


காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சாராய வியாபாரி ஸ்ரீதர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ.150 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளை சென்னை அமலாக்கப் பிரிவு நேற்று முடக்கியது. இது தொடர்பாக சென்னை அமலாக்கப் பிரிவு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சிவப்பு அறிக்கை t; ஸ்ரீதர் மற்றும் அவரது கூட்டாளி கள் மீது பல்வேறு குற்றங்களுக் காக தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் 26 வழக்குகளில் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீதர் கடந்த 3 ஆண்டுகளாக, இந்தியாவுக்கு வெளியில், துபாயில் இருந்து கொண்டு, இந்திய நீதிமன்ற நடவடிக்கை களை தவிர்த்து வந்துள்ளார். அதற் காக சிபிஐ, இன்டர்போல் ஆகி யவை சிவப்பு அறிக்கையும் வெளியிட்டுள்ளன.

தமிழக காவல்துறை அளித்த தகவலின் அடிப்படையில் அமலாக் கப்பிரிவு நடத்திய விசாரணையில், அவர் பண மோசடியில் ஈடுபட்டதும், அதன் மூலம் 124 அசையா சொத்துகளை, இவர் பேரிலும், இவரது மனைவி குமாரி, மகள் தனலட்சுமி, சகோதரர் செந் தில் ஆகியோர் பெயரில் வாங்கி யிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. மேலும் இவரது மனைவி பெயரில் வங்கி சேமிப்பு கணக்கும், வைப்பு நிதியும் இருப் பது தெரியவந்துள்ளது. இந்த சொத்துகள் பல்வேறு குற்ற நடவடிக்கைகள் மூலம் சம்பாதிக் கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட் டுள்ளது.
மேலும் முந்தைய காலத்தில் இவர், இவரது தம்பியுடன் சேர்ந்து கள்ளச் சாராய விற்பனை தொழில் செய்து வந்ததும், இவர் முறையாக வருவாய் ஈட்டவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
சகோதரர் செந்தில் பெயரில் 40 சொத்துகளை ஸ்ரீதர் வாங்கி யிருக்கிறார். மேலும் அவரது மகள் மாணவியாக உள்ளதால், அவ ருக்கு எந்த வருமானமும் இல்லாத நிலையில், ஸ்ரீதரால் வாங்கப்பட்ட சொத்துகள், மகள் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர் பான விசாரணைக்கு ஆஜராக தர் மற்றும் அவரது மனைவி ஆகி யோருக்கு சம்மன் அனுப்பியும், அவர்கள் விசாரணையை தவிர்த்தனர்.
அதனைத் தொடர்ந்து, மேற் கூறிய 4 பேரின் 124 அசையா சொத்துகள் மற்றும் வங்கியில் உள்ள ரூ.34 லட்சம் ஆகியவற்றை முடக்கியுள்ளோம். இந்த சொத்து களின் சந்தை மதிப்பு ரூ.150 கோடி ஆகும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. tamitheindu.com

கருத்துகள் இல்லை: