சனி, 3 செப்டம்பர், 2016

பான் கி மூன் : இறுதிகட்ட போரின் போது ஐ நா தமிழர்களை காக்க தவறிவிட்டது

UN 'failed Sri Lanka civilians'கொழும்பு: இலங்கையில் நடந்த இறுதி கட்ட
போரின் போது தமிழர்களை காக்க ஐக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது என அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் பான் கீ-மூன் தெரிவித்துள்ளார்
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலர் பான் கீ மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை சென்றுள்ளார். கொழும்புவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் பேசியதாவது: ஐ.நா., சபையின் இலங்கைக்கான பிரதிநிதிகள் சரியாகச் செயல்பட்டிருந்தால், இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போரின் போது, அதிக அளவிலான மனித உயிர்களைப் பாதுகாத்திருக்க
முடியும். வடக்கு, கிழக்குப் பகுதிகளிலிருந்து ராணுவம் குறைக்கப்பட வேண்டும். இடம்பெயர்ந்து அகதி வாழ்க்கை வாழும் மக்களை, சொந்த இடங்களில் குடியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 30 ஆண்டு கால போரின் போது ஏற்பட்ட பாதிப்புக்களைச் சரிசெய்வதில் அந்நாட்டு அரசு மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.  ஐ நா பெண்களுக்கான தூதராக  பெண் போராளி ஐஸ்வர்யா தனுஷ்தான் தற்போது  இருக்கிறாரே இனி அவா  பார்த்துப்பார்

அவற்றைச் சரியாகத் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், மறு சீரமைப்புப் பணிகளில் ஏராளமான புதிய நடவடிக்கைகளை அரசு எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். கடந்த 2009ம் ஆண்டு இலங்கைக்கு சென்ற பான் கி-மூன் தற்போது 2வது முறையாக அங்கு சென்றுள்ளார்.  tamiloneindia.com

கருத்துகள் இல்லை: