வெள்ளி, 2 செப்டம்பர், 2016

சட்டப்பேரவையில் பெண் இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சி!

சட்டப்பேரவையில் இன்று சட்டப்பேரவை நிகழ்வுகள் வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டி ருந்தன. அப்போது சீருடையில் வந்த திருவொற்றியூர் பெண் ஆய்வாளர் காஞ்சனா சட்ட ப்பேரவையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களிடம் முதலமைச்சரை சந்திக்க வேண்டும் என்று அனுமதி கேட்டுள்ளார். முதலமைச்சர் சட்டப்பேரவையில் இருப்பதால் அவரை பார்க்க முடியாது என்று காவலர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அந்த இன்ஸ்பெக்டர் தான் தயாராக வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீவைத்துக்கொள்ள முயற்சித்துள்ளார்.
உடனே அங்கிருந்த காவலர்கள் அவரை தடுத்தி நிறுத்தி காப்பாற்றினர். பின்னர் அவரை போலீசார் அங்கிருந்து அழைத்துச்சென்றனர். சட்டப்பேரவை வளாகத்தில் பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. படங்கள் : ஸ்டாலின்  நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை: