நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பியாக கடந்த 7 மாதமாக பணியாற்றி வந்தவர் விஷ்ணுப்பிரியா(27). நேற்று முன்தினம் வீட்டில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே அவரது உடல் சொந்தவூரான கடலூரை அடுத்த கொண்டூருக்கு கொண்டு செல்லப்பட்டது.
பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை 10.50 மணிக்கு விஷ்ணுப்பிரியாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. 12. 30 மணிக்கு தென்பென்னை ஆற்றக்கரையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
விஷ்ணுப்பிரியாவின் இறுதிச்சடங்கில் கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள், திமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினர் பங்கேற்றனர். அதிமுக மற்றும் பாமகவினர் மட்டும் பங்கேற்கவில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக