சென்னை: லெக்கின்ஸ் குறித்த கட்டுரை வெளியிட்ட குமுதம் ரிப்போர்ட்டர்
வார இதழ் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, ஆன்லைன் கையெழுத்து இயக்கம்
தொடங்கப்பட்டுள்ளது.
'லெக்கின்ஸ் ஆபாசம் - எல்லைமீறும் இளசுகள்' என்ற தலைப்பில் குமுதம்
ரிப்போர்ட்டர் வார இதழ் வெளியிட்ட அட்டைப்பட கட்டுரையில், லெக்கின்ஸ்
அணிந்த பெண்களை ஆபாச கோணத்தில் படம் பிடித்து போட்டுள்ளதாக சர்ச்சை
எழுந்துள்ளது.
இந்நிலையில், பெண் பத்திரிகையாளர் கவிதா முரளிதரன், ஆன்லைனில் கையெழுத்து
இயக்கம் தொடங்கி, குமுதம் மன்னிப்பு கேட்க வலியுறுத்திவருகிறார். நேற்று
தொடங்கப்பட்ட ஆன்லைன் இயக்கத்தில் இன்று நண்பகல் நிலவரப்படி ஏறத்தாழ
ஐயாயிரம் பேர் கையெழுத்திட்டிருந்தனர். குமுதம் பாணியிலேயே கேட்கிறோம்: முதலைச்சர் ஜெயலலிதா மீது குமுதம் ஆபாச குற்ற சாட்டு வைக்கிறதா?
இதுகுறித்து கையெழுத்து இயக்க முன்னுரை கூறுவது: பெண்களின் அனுமதியின்றியே குமுதம் அவர்கள் லெக்கின்ஸ் அணிந்த போட்டோவை பிரசுரித்துள்ளது. லெக்கின்ஸ் மீது குர்தா அணிந்த பெண்களையும், காற்றில் குர்தா விலகும்போது, மறைந்திருந்து போட்டோ எடுத்து ஆபாச கோணத்தில் போட்டுள்ளது. Tweets by @kavithamurali பெண்கள் டீசன்டாக ஆடை அணிவது குற்றங்களை குறைக்கும் என்ற கோணத்தில் பெயரில்லா ஒரு கவிஞர் கூறியதாகவும் செய்தியில் தகவல் தரப்பட்டுள்ளது. இது பெண்களின் மாண்புக்கு எதிரானது. எனவே கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று, குமுதத்தை மன்னிப்பு கேட்க வலியுறுத்தினால், பிற ஊடகங்களும், பெண்களுக்கு எதிரான ஸ்டோரிகளை பிரசுரிக்க ஒன்றுக்கு இரு முறை யோசிக்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Read more at /tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக