ஜப்பானில் விஞ்ஞானிகள் உருவாக்கிய சேர்க்கை சிறுநீரகம் எலி மற்றும் பன்றியிடம் செய்யப்பட்ட சோதனை வெற்றியடைந்தது.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உடல் பாகங்கள்
தட்டுப்பாடு உள்ளதால் மனிதர்களின் உறுப்புகள் ஆய்வகத்தில் வைத்து
விஞ்ஞானிகளால் தயாரிக்கப்படுகிறது. அது போன்று சிறுநீரகங்கள் உருவாக்கும்
முயற்சியில் ஜப்பானில் டோக்கியோவில் உள்ள ஜி.கே மருந்து பல்கலைக்கழகத்தை
சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் தக்ஷி யோகோ தலைமையிலான குழு செயற்கை சிறுநீரகம்
உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மனிதர்கள் ஸ்டெம் செல்களை பயன்படுத்தி ஆய்வகத்தில்
வைத்து அதி நவீன தொழில்நுட்ப முறையில் உருவாக்கப்பட்டது. அவற்றை எலி
மற்றும் பன்றியின் உடலில் பொருத்தி பரிசோதித்து பார்த்தனர். அப்போது இந்த
சிறுநீரகம் ரத்தத்தில் இருந்து சிறுநீரைப் பிரித்து வெளியேற்றியது. அதன்
மூலம் இந்த சோதனை வெற்றி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஒரு முறை
பரிசோதிக்கப்பட்டபோது சிறுநீரை சிறுநீரகம் வெளியேற்றவில்லை.
தற்போது அதை மேம்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளனர். முதலில் எலியிலும், அதன் பின்னர் பன்றியிலும் இச்சோதனை நடத்தப்பட்டது dinamani.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக