புதன், 23 செப்டம்பர், 2015

தமிழை வழக்காடும் மொழியாக அறிவிப்பதில் தவறு இல்லை: மார்க்கண்டேய கட்ஜூ

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாக தமிழை கொண்டு வருவது நியாயமானது தான் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை கொண்டுவர வேண்டும் என்ற வழக்குரைஞர்களின் போராட்டம் நியாயமானது தான். தமிழ் போன்ற உயரிய மொழியை வழக்காடுவது பலர் தரப்பிலும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தமிழை வழக்காடும் மொழியாக அறிவிப்பது எந்த தவறும் இல்லை என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார் nakkheeran.in

கருத்துகள் இல்லை: