சனி, 26 செப்டம்பர், 2015

எழுத்தாளர் ஸ்ரீதேவி மேடையில் அமரக்கூடாது ..சாமியார் அட்டகாசம்...அப்துல்கலாமின் புத்தக வெளியீட்டு விழாவில் அவமதிப்பு!


திருச்சூர் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் கடைசி புத்த்கத்தின்
மலையாள மொழியாக்கம் இன்று கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள சாகித்ய அகாடமி அரங்கில் வெளியிடபடுவதாக அறிவிக்கபட்டு இருந்தது. இந்த புத்தகத்தை ஸ்ரீதேவி எஸ்.கர்தா என்ற பெண் எழுத்தாளர் மொழியாக்கம் செய்திருந்தார். நிகழ்ச்சிக்கு சுவாமி பிரமாவிகாரி தாஸ் இதற்கு தலைமையேற்பதாக அறிவிக்கப்பட்டது.  ஆனால் இந்த நிகழ்ச்சி திடீர் என ஒத்திவைக்கப்ட்டது. காரணம் ஸ்ரீதேவிக்கு விழாவில் பங்கேற்க புத்தக வெளியீட்டாளர்கள் அனுமதி மறுத்துவிட்டனராம். இதற்கு, சாமியார் தன்னுடன் ஒரு பெண் மேடையில் அமர கூடாது என்று கூறியதே காரணம் என்று ஸ்ரீதேவி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.  இதை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எழுத்தாளர் ஸ்ரீதேவி மறுத்து விட்டார்.

இது குறித்து ஸ்ரீதேவி தனது பேஸ்புக்கில் ” முதல் 3 இருக்கை வரிசை சுவாமியின் சீட்டர்களுக்கு ஒத்துக்கபட்டு உள்ளது. அவர்கள் புனித தன்மையற்ற பெண்கள் நிழல் எங்கள் மீது  படக்கூடாது என கூறி இருந்தனர் ந ஏளன் படுத்தியதாக ஸ்ரீ தேவி கூறி உள்ளார்.

இதைகேள்விப்பட்ட பெண்கள் அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் விழா நடைபெறவிருந்த இடத்தில் போராட்டங்கள் நடத்தினர். இதையறிந்த பிரமாவிகாரி தாஸ் விழாவுக்கு வராமல் தவிர்த்துவிட்டார். இதனால் புத்தக வெளியீட்டு விழா ரத்தாகி உள்ளது.

ஆனால், சுவாமி எதுவும் கூறவில்லை என்றும், புத்தக வெளியீட்டுக்கு மொழியாக்கம் செய்வோரை அழைப்பது தங்கள் பழக்கம் இல்லை என்றும் புத்தக வெளியீட்டு நிறுவனம் விளக்கம் தந்துள்ளது. ஆயினும் சமூக வலைதளங்களில் இந்த நிகழ்ச்சி விமர்சிக்கப்பட்டுவருகிறது.dailythanthi.in

கருத்துகள் இல்லை: