நேதாஜியின் பேரனான சந்திர குமார் போஸ், பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:இந்திய அரசு கூறுவது போல, 1945 ஆகஸ்ட் 18ல், தைவானில் நடைபெற்ற விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை; அதன் பிறகு பல
ஆண்டுகள் உயிருடன் வாழ்ந்து உள்ளார். எனினும், அவரால் இந்தியா வர முடியாத நிலை இருந்துள்ளது.என் தந்தை அமியாநாத் போசை, அப்போதைய அரசு உளவு பார்த்து வந்துள்ளது. நேதாஜியின் ஹிட்லர் தொடர்பு உலகமக்களுக்கு விபரமாக தெரிய வரும்போது யார் யாரெல்லாம் நாகரிக உலகத்திடம் பாவமன்னிப்பு கேட்க போகிறார்களோ தெரியவில்லை?
எங்கள் உறவினர்களின் கடிதப் போக்குவரத்துகள், வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு இது தொடர்ந்து
உள்ளது.அப்போதைய பிரதமர் நேரு உத்தரவின் படியே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுஉள்ளன. மறுத்தால்... இதற்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா, அவர் மகனும், துணைத் தலைவருமான ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும். மறுத்தால், அந்த சதிச் செயலுக்கு அவர்களும் ஆதரவு அளிக்கின்றனர் என்பது அர்த்தமாகும்.செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த பெண்ணை நேதாஜி மணந்ததாகவும், அவர்களுக்கு, நிமா என்ற பெயரில் மகள் இருந்ததாகவும் வெளியாகும் செய்திகளில் உண்மைஇல்லை.இவ்வாறு சந்திரகுமார் போஸ் கூறியுள்ளார்.
முதல்வர் மம்தா பானர்ஜி, சில நாட்களுக்கு முன், நேதாஜி தொடர்பாக, மேற்கு வங்க அரசு வசமிருந்த, 64 ஆவணங்களை வெளியிட்டார். அப்போது அவர் கூறும் போது, 'இந்த ஆவணங்களைப் பார்க்கும் போது, நேதாஜியின் உறவினர்களை, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் பிரதமர் நேரு, பல ஆண்டுகளாக உளவு பார்க்க உத்தரவிட்டுள்ளது தெரிய வருகிறது' என்றார். தினமலர்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக