
பங்களாதேஷின் தென்பகுதித் துறைமுகமான சிட்டகாங்கில் ஒரு கப்பலிலிருந்து போலி இந்திய ரூபாய் நோட்டுகள் பெருமளவு கைப்பற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு உளவுத் துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். ஐக்கிய அரபு எமிரேட்டுகளிலிருந்து வந்த இந்தக் கப்பலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கள்ளநோட்டுகள் மிக உயர்ந்த தரத்தில் இருந்ததாக அவர்கள் கூறினர். இந்த சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் அச்சிடப்பட்ட பல லட்சக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள இந்தியப் போலி ரூபாய் நோட்டுகள் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இந்தியாவுக்குள் புழக்கத்துக்கு விடப்படுகின்றன என்பதை இந்தியாவின் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை நிறுவனம் விசாரித்து வருகிறது.bbc.tamil.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக