திங்கள், 24 ஆகஸ்ட், 2015

Jeyalalitha சுலோகம் ! அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்…!

24-1440407455-jayalalitha-tn-assembly1-600  அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்...! 24 1440407455 jayalalitha tn assembly1 60024-1440407417-jayalalitha-tn-assembly5-600  அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்...! 24 1440407417 jayalalitha tn assembly5 600சென்னை: அதிமுகவினருக்கு எது திருவிழா தெரியுமா.. புன்னகை பூத்த தங்களது “தங்கத் தலைவி” ஜெயலலிதாவின் முகத்தைப் பார்க்கும் அந்த ஒரு நிமிடம்தான்.. அதுதான் அவர்களுக்கு தீபாவளி, புத்தாண்டு, தைப்பொங்கல் மற்றும் கார்த்திகைப் பெரு விழா. ஜெயலலிதா புன்னகைக்கும் ஒவ்வொரு நொடியையும், நிமிடத்தையும் அப்படிக் கொண்டாடுகிறார்கள் அதிமுகவினர். 2ம் நிலை தலைவர் முதல் தொண்டர்கள் வரை இந்த விஷயத்தில் பக்தர்களாகி விடுகிறார்கள்.
ஜெயலலிதாவை நேரில் பார்த்துக் கும்பிட முடியாவிட்டாலும் அவர் இருக்கும் திசையை நோக்கி கும்பிடு போட்டு தங்களது பக்தியை வெளி்ப்படுத்துகிறார்கள்.


வெளியில் வந்தாலே திருவிழாதான் ஜெயலலிதா கட்சி அலுவலகத்திற்கு வருவதாக இருந்தாலும் சரி, கோட்டைக்கு வருவதாக இருந்தாலும் சரி, சட்டசபைக்கு வந்தாலும் சரி, அது அதிமுகவினரைப் பொருத்தவரை திருவிழா, திருநாள் தான்.
24-1440407426-jayalalitha-tn-assembly4-600  அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்...! 24 1440407426 jayalalitha tn assembly4 600
பணிவும், அன்பும்
அதிமுகவினர் ஜெயலலிதாவை கும்பிடும் ஸ்டைலே தனிதான். இப்படி ஒரு பக்தி மயமான, பணிவு கலந்த, அன்பான வணக்கத்தையும், மரியாதையையும் வேறு எந்த தலைவராவது பெற்றிருப்பார்களா என்பது சந்தேகம்தான்.
பக்தி நிலை
ஜெயலலிதாவை அதிமுகவினர் வணங்கிப் பணிவதை பலரும் கேலி செய்தாலும் கூட அதிமுகவினர் அதைப் பொருட்படுத்துவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை ஜெயலலிததான் கடவுள். அவரை “ஜஸ்ட்” கும்பிடுவதை விட பக்தியுடன் வணங்கிப் பவ்யமாக நிற்பதே அவர்களுக்கு பொருத்தமான செயலாக அவர்கள் கருதுகிறார்கள்.
24-1440407444-jayalalitha-tn-assembly2-600  அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்...! 24 1440407444 jayalalitha tn assembly2 600
சட்டசபைக்கு வந்த ஜெயலலிதா
இதேபோன்றதொரு பக்திக் காட்சியைத்தான் இன்று சட்டசபைக்கு ஜெயலலிதா வந்தபோதும் காண முடிந்தது. ஜெயலலிதா சட்டசபைக் கூட்டத்திற்கு வருகை தந்தபோது லைன் கட்டி அதிமுகவினர் பவ்யமாக கும்பிட்டனர்.
வரிசையாக நின்ற அமைச்சர்கள்
குறிப்பாக ஜெயலலிதாவின் கார் பார்க் செய்யப்படும் இடத்தில் அமைச்சர்கள் வரிசையாக நின்று பவ்யமாக ஒரே மாதிரியாக கும்பிடு போட்டு குனிந்து நின்று தங்களது தலைவிக்கு வரவேற்பு அளித்தனர்.
ஆரவார வரவேற்பு
சட்டசபைக்கு வந்த ஜெயலலிதாவுக்கு சுற்றுப்பகுதியிலும் வழி நெடுகிலும் குழுமியிருந்த அதிமுகவினர் இதே பாணியில் பணிவு கலந்த வணக்கத்தை வைத்து தங்களது தலைவியை வரவேற்றனர்.
24-1440407397-admk-supporter34-05010  அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்...! 24 1440407397 admk supporter34 05010
புகைப்படம், ஸ்டிக்கர் விநியோகம்
மேலும் சட்டசபை வளாகத்தில் நின்றிருந்த எம்.எல்.ஏக்களுக்கு சட்டைப் பையில், ஜாக்கெட்டில் குத்திக் கொள்வதற்காக ஜெயலலிதா படம் அடங்கிய ஸ்டிக்கர்கள், புகைப்படங்களையும் தட்டில் வைத்து விநியோகித்தனர். இதை போட்டிப் போட்டுக் கொண்டு எம்.எல்.ஏக்கள் வாங்கிக் கொண்ட காட்சியையும் காண முடிந்தது. என்னதான் சொல்லுங்க.. “அம்மா” வந்தா அதிமுகவினருக்குக் கிடைக்கும் “எனர்ஜி”யே தனிதான்! oneindia.com 

கருத்துகள் இல்லை: