திங்கள், 24 ஆகஸ்ட், 2015

ரயில்களில் கண்காணிப்பு கேமரா: ரூ.700 கோடி செலவிட முடிவு

 ரயில்களில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், 20 ஆயிரம் பெட்டிகளில், ரகசிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்த, ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:ரயில்களில் பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், ரயில் பெட்டிகளில் ரகசிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே, மும்பை, டில்லி போன்ற நகரங்களில் புறநகர் ரயில்களில், பெண்களுக்கான பெட்டிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. தற்போது, அனைத்து ரயில்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 'நிர்பயா' திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலிருந்து, 700 கோடி ரூபாயை, இதற்காக செலவிடவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.



ஒப்புதல்:

இதற்காக, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துடன் பேச்சு நடத்தி, ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது. இந்த திட்டப்படி, நாடு முழுவதும், 20 ஆயிரம் ரயில் பெட்டிகளில் கேமராக்கள் பொருத்தப்படும். இவ்வாறு ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

* நாடு முழுவதும், தினமும், 11 ஆயிரம் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
* இவற்றில், 1,300 ரயில்களில், ரயில்வே பாதுகாப்பு படையின் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
* மேலும், 2,200 ரயில்களில், மாநில ரயில்வே போலீசார் எனப்படும், ஜி.ஆர்.பி., போலீசார்,
பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
*மற்ற ரயில்களில், போதிய பாதுகாப்பு வசதி இல்லை தினமலர்.com 

கருத்துகள் இல்லை: