புவி வெப்பமடைதலால் உருகும் பனி மலைகள், மற்றும் பருவநிலை மாற்றம் ஆகிய காரணங்களால் கடல் மட்டத்தின் அளவு மூன்று அடி உயரும் என்று நாசா ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2013-ம் ஆண்டு பருவநிலை மாற்றத்துக்கான ஐக்கிய நாடுகளின் குழு கடல் மட்டம் உயர்வு பற்றி ஆய்வு நடத்தியது. அதில் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடல் மட்டத்தின் அளவு ஒரு அடியில் இருந்து மூன்று அடியாக உயரலாம் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் அது எவ்வளவு விரைவாக நடைபெறும் என்பதை உறுதி செய்ய முடியாது. கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிகா போன்ற பகுதியில், பனிப்பாறைகள் உருகியதால் கடல்மட்ட அளவு 3 அங்குலமாக உயர்ந்துள்ளது.” என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மேலும் 3 அடிகள் வரை கடல் மட்டம் உயர்ந்தால் அது கோடிக்கணக்கான மக்களுக்கு ஆபத்தானதாக மாறும் என்று நாசா கவலை தெரிவித்துள்ளது. ஆனால் விஞ்ஞானிகளோ இனி இதை தடுத்து நிறுத்துவது என்பது மிகவும் காலதாமதமானது, அதற்கான காலத்தை நாம் எப்போதோ கடந்து விட்டோம் என்று ஆதங்கமடைகின்றனர் maalamalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக