சிரியாவின் பல்மைராவில் பல்ஷமின் கோவில் அழிக்கப்படுவதைக் காட்டும் புகைப்படங்களை இஸ்லாமிய அரசு என்று கூறிக்கொள்ளும் குழு வெளியிட்டுள்ளது.
Image caption பல்ஷமின் கோவில் குண்டுவைத்துத் தகர்க்கப்படுவதைக் காட்டுப் புகைப்படம்.
கோவிலை பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வைத்துத் தகர்க்கும் காட்சிகளும் பெரும் வெடிப்பு நிகழும் காட்சிகளும் கொண்ட புகைப்படங்கள் அந்த ஜிகாதிக் குழுவின் ஆதரவாளர்களால் பகிரப்பட்டுவருகின்றன.புகழ்பெற்ற பல்ஷமின் கோவில் இடிபாடுகள்.
இந்தக் கோவில் ஞாயிற்றுக்கிழமையன்று தகர்க்கப்பட்டதாக சிரிய அதிகாரிகளும் செயற்பாட்டாளர்களும் தெரிவித்தனர்.
சிரியடாவின் கலாச்சாரப் பொக்கிஷத்தைச் சிதைத்தது ஒரு போர்க் குற்றம் என ஐ.நா.வின் கலாச்சாரப் பிரிவான யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.bbc.com/tamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக