கொச்சியில் மீன்பிடி படகு மோதியதில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது.
கொச்சியில்
45 பேருடன் பயணித்த சுற்றுலாப் படகு ஒன்றின் மீது இன்று பிற்பகல் 1.45
மணியளவில் திடீரென மீன்பிடிப் படகு மோதியது. இதில் படகு இரண்டாக உடைந்து
கவிழ்ந்தது.
இதனைத்
தொடர்ந்து மீட்புப் பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் 8
பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 30 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு
கொச்சி, எர்ணாகுளம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
35 பேர் செல்லக் கூடிய இந்த படகில் அதிக எண்ணிக்கையில் பயணிகள் ஏற்றப்பட்டது குறித்து விசாரிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது tamil.oneindia.com/
35 பேர் செல்லக் கூடிய இந்த படகில் அதிக எண்ணிக்கையில் பயணிகள் ஏற்றப்பட்டது குறித்து விசாரிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது tamil.oneindia.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக