சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட லாரியில் ஹங்கேரி நெம்பர் பிளேட் காணப்பட்டது.
அதைப்பயன்படுத்தி தப்பியோடிய லாரி ஓட்டுநரை கண்டுப்பிடிப்பதற்காக ஆஸ்த்ரிய அரசாங்கத்துடன் சேர்ந்து பணியாற்றவுள்ளதாக ஹங்கேரி தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஜெர்மனி, ஆஸ்திரியா, மேற்கு பால்கன் பகுதியைச் சேர்ந்த ஆறு நாடுகள் இணைந்து குடியேறிகள் பிரச்சனையை எதிர்கொள்வது குறித்த பேச்சுவார்த்தையை இன்று வியன்னாவில் துவங்கியிருக்கின்றன.
சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பதாக ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மார்க்கெல் தெரிவித்திருக்கிறார்.
இது ஐரோப்பா முழுவதற்குமான எச்சரிக்கையென்றும் குடியேறிகள் பிரச்சனையில் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வதன் மூலமே அதனை சமாளிக்க முடியும் என்றும் ஏஞ்சலா மார்க்கெல் தெரிவித்துள்ளார்.
அப்படிச் செய்யாவிட்டால், ஐரோப்பிய யூனியன் முழுவதுமே இதன் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என அவர் கூறியிருக்கிறார் bbc.tamil.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக