திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக 2 முக்கிய நபர்களிடம் உண்மை
கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர்
ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு திருச்சியில் படுகொலை செய்யப்பட்டார். இந்த
வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்து வந்தனர். ஆனால் 3 ஆண்டுகளாகியும்
வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததையடுத்து, சி.பி.ஐ விசாரணை கோரி
ராமஜெயத்தின் மனைவி லதா உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல்
செய்தார். இதற்கு பதிலளித்த சி.பி.சி.ஐ.டி போலீஸார் அக்டோபர் மாதம் வரை
அவகாசம் கோரினர்.
வழக்கு தொடர்பாக நந்தகுமார் மற்றும் கேபிள் முருகன் ஆகிய இரண்டு பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தவும் சி.பி.சி.ஐ.டி அனுமதி கோரியது. இதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து இன்று சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அலுவலகத்தில் 2 பேரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது தினகரன்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக