மும்பை:நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, ஷீனா போரா கொலை
வழக்கில் கைதான, இந்திராணி முகர்ஜியின், இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னாவை,
போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, நீதிமன்றம் அனுமதி வழங்கியது. கடந்த
1997 முதல் 2007 வரை, ஸ்டார் இந்தியா 'டிவி' சேனலின் தலைமை நிர்வாகியாக
இருந்தவர், பீட்டர் முகர்ஜி. இவரது இரண்டாம் மனைவி இந்திராணி; ஏற்கனவே, இரு
முறை திருமணம் ஆனதை மறைத்து,பீட்டரை, மூன்றாவது கணவராக மணந்தார்.
அறிமுகம்:கடந்த
2012ல், முதல் கணவர் மூலம் பிறந்த ஷீனா போராவை, தன் சகோதரி என, அறிமுகம்
செய்து, தன்னுடன் தங்க வைத்தார் இந்திராணி. இந்த ரகசியம் அறியாத, பீட்டரின்
முதல் மனைவிக்கு பிறந்த ராகுல், ஷீனாவை காதலித்தார்; ஷீனா கர்ப்பமானதாக
தெரிகிறது. எல்லாருமே பல முறை திருமணம் புரிந்த நிலையில் அவர்களுக்கு பிறந்தவர்கள் மாத்திரம் உறவு முறைகளை மதிக்கணும்னு எதிர்பார்த்தால் எப்படி?
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்ட வனப்பகுதியில், ஷீனா கழுத்து நெரித்து கொல்லப்பட்டு, எரிக்கப்பட்டார். ஒரு மாதத்துக்கு பின், எரிந்த நிலையில் கிடந்த உடலை கண்டுபிடித்த போலீசார், சில எலும்புகளை, மும்பை ஜெ.ஜெ., மருத்துவமனைக்கு, பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த எலும்புகளை வைத்து, வயது, பாலினம், இறப்பின் தன்மையை கண்டுபிடிக்க முடியவில்லை, என, மருத்துவமனை நிபுணர்கள் கைவிரித்தனர்.இதற்கிடையில், கடந்த 25ம் தேதி, இந்திராணியின் கார் டிரைவர் சியாம் மனோகர் ராயிடம், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, 'ராய்காட் வனப்பகுதியில் கிடந்தது, ஷீனாவின் உடல்; அவரது தாய் இந்திராணிதான் கொன்றார்; பிணத்தை அப்புறப்படுத்த உதவி செய்தேன்' என, சியாம் ஒப்புக் கொண்டான்.
இதையடுத்து, அதே நாளில், இந்திராணி கைது செய்யப்பட்டார். மறுநாள், கொலைக்கு உதவிய, இந்திராணியின் இரண்டாவது கணவன் சஞ்சீவ் கன்னா, கோல்கட்டாவில் கைது செய்யப்பட்டார். நேற்று, மும்பை, பந்த்ரா நீதிமன்றத்தில், சஞ்சீவ் கன்னாவை போலீசார் ஆஜர்படுத்தினர். வரும் 31ம் தேதி வரை, போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, நீதிமன்றம் அனுமதி அளித்தது.
சஞ்சீவ் கன்னாவுக்கு எதிராக, கடத்தல், கொலை, தடயங்களை மறைத்தல் உள்ளிட்ட பிரிவுகளில், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சஞ்சீவ் கன்னா, இந்திராணி, கார் டிரைவர் சியாம் ஆகியோரிடம், ரகசிய இடத்தில் தீவிர விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இவ்வழக்கு குறித்து, போலீஸ் உயரதிகாரி, நிருபர்களிடம் கூறுகையில், ''சஞ்சீவ் கன்னாவின் பாஸ்போர்ட், லேப்-டாப், மொபைல் போனை கைப்பற்றி உள்ளோம். கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதம், காரை கைப்பற்ற முயல்கிறோம். ஜெ.ஜெ., மருத்துவமனையில் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட ஷீனாவின் எலும்புகளை திரும்பப் பெற்று உள்ளோம்,'' என்றார்.
ஒத்துழைப்பு:இதற்கிடையில், ஷீனாவுடன் சகோதரர் மிகேல், 'கொலையான ஷீனா, இந்திராணியின் சகோதரி அல்ல; அவரது மகள்தான்' என, போலீசாரிடம் தெரிவித்துள்ளார். ஷீனா கொலை வழக்கு தொடர்பாக, அசாம் தலைநகர் கவுகாத்தியிலிருந்து, மும்பை வந்துள்ள, மிகேல், ''எனது சகோதரி ஷீனா கொலைக்கு, நீதி கிடைக்க வேண்டும். அதற்காக, போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்,'' என, கூறியுள்ளார் dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக