வெள்ளி, 24 ஜனவரி, 2014

காலை 7.10 முதல் 8.05 வரை அழகிரிக்கும் கலைஞருக்கும் இடையில் கோபாலபுரத்தில் கடும் வாக்குவாதம்

சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கும், மு.க.அழகிரிக்கும் இடையே இன்று காலை கோபாலபுரம் இல்லத்தில் மிகக் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதன் இறுதியில் கருணாநிதியின் அறையிலிருந்து அழகிரி மிகக் கோபத்துடன் வெளியேறியதாகவும், அதன் பின்னரே அன்பழகனை அழைத்து உடனடியாக அழகிரியை கட்சியை விட்டு சஸ்பெண்ட் செய்யும் உத்தரவை வெளியிட கருணாநிதி உத்தரவிட்டதாவும் தகவல்கள் கூறுகின்றன. அந்த வாக்குவாதத்தின்போது என்ன பரிமாறிக் கொள்ளப்பட்டது என்பது குறித்துத் தெரியவில்லை. ஆனால் கருணாநிதி அறையிலிருந்து அழகிரி மிகுந்த கோபத்துடன் வெளியேறியதாகவும், கீழே காத்திருந்த தனது மகள் கயல்விழி மற்றும் மருமகனை தன்னுடன் வருமாறு வேகமாக கூறியபடி அழகிரி வீட்டை விட்டு வெளியேறியதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இன்று காலை 7 மணியளவில் கோபாலபுரம் வீட்டுக்கு வந்துள்ளார் அழகிரி. நேராக மாடியில் இருந்த கருணாநிதி அறைக்கு விரைந்த அவர், கருணாநிதியுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டாரம். சுமார் 7.10 மணி முதல் 8.05 வரை இந்த வாதம் நீடித்ததாக தெரிகிறது. அப்போது கருணாநிதியுடன் அவரது உதவியாளர் மட்டுமே இருந்துள்ளார். வேறு யாரும் இல்லை. இன்று காலை 7.10 முதல் 8.05 வரை கோபாலபுரத்தில் நடந்தது என்ன?... பரபர தகவல்கள்! அதன் பின்னர் அழகிரி கோபத்துடன் கீழே வந்துள்ளார். தனது மகள், மருமகனை அழைத்துக் கொண்டு வேகமாக வெளியேறியுள்ளார். அதன் பின்னர் கருணாநிதி, அன்பழகனை அழைத்துள்ளார். அவருடன் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளா்ர். உடனடியாக அழகிரியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடுமாறு கூறியுள்ளார். இதையடுத்து அழகிரி நீக்கச் செய்தியை அன்பழகன் வெளியிட்டார். கோபாலபுரம் வீட்டில் கருணாநிதி, அழகிரி இடையிலான கடும் வாதத்தின்போது என்ன பரிமாறிக் கொள்ளப்பட்டது என்பது குறித்த விவரம் தெரியவில்லை
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: