
இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில் அமைந்தகரை புல்லா அவென்யூவில் உள்ள ஒரு ஓட்டலில் டிபன் சாப்பிட வந்தார் நித்யானந்தம். கூட்டம் அதிகமாக இருந்தது. ஓட்டலில் நித்யானந்தம் சாப்பிட்டு கொண்டிருந்தபோது 2 பைக்கில் 4 பேர் கும்பல், அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்தது. பைக்கை ஓட்டல் வெளியே நிறுத்திவிட்டு ஓட்டலுக்குள் புகுந்தது. அங்கு சாப்பிட்டு கொண்டிருந்த நித்யானந்தத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இந்த சம்பவத்தை பார்த்ததும் அங்கு சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அலறி ஓடினர். உடனே அந்த கும்பல் தப்பியது.
தகவல் அறிந்து அண்ணா நகர் துணை கமிஷனர் சேவியர் தன்ராஜ், உதவி கமிஷனர் சுப்பிரமணி, இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ரவீந்திரன், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். நித்யானந்தத்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் வழக்கு பதிந்து முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என விசாரிக்கின்றனர். 4 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
tamilmurasu.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக