வியாழன், 23 ஜனவரி, 2014

NRI தமிழரான ஏ.ஜே.பால்ராஜுக்கு நோபலுக்கு இணையான மார்கோனி விருது

வானொலியைக் கண்டுபிடித்த குக்லில்மோ மார்கோனியின் நினைவாக அவரது மகள் கியோயா மார்கோனி பிராகா அமைத்துள்ள மார்கோனி சொசைட்டி இந்த வருடம் 50 ஆவது ஆண்டுவிழாவைக் கொண்டாடி வருகின்றது. இந்த நிறுவனம் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வலைத்தளம், செயற்கைக்கோள் தொடர்புகளில் தங்களது கணிதக் கோட்பாடுகள் மற்றும் கண்டுபிடிப்புகளின் மூலம் சாதனை புரிவோருக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுக்கு இணையான உயரிய தொழில்நுட்ப மார்கோனி விருதை வழங்கிவருகின்றது. இந்த ஆண்டிற்கான இந்த விருதும், 1,00,000 டாலர் பரிசுப்பணமும் வெளிநாடுவாழ் இந்தியரான ஏ.ஜே.பால்ராஜுக்கு வழங்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் பிறந்த பால்ராஜ் தற்போது அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார். மல்டிமீடியா துறையின் அதிவேக வளர்ச்சியான பிராட்பேண்ட் சேவைகளில் இவரின் முக்கிய ஆக்க கண்டுபிடிப்பான எம்ஐஎம்ஓ ( மல்டிபிள் இன்புட் மல்டிபிள் அவுட்புட்) இன்றியமையாத பங்கு வகிக்கின்றது. தமிழரான


தற்போதைய அதிவேக WIFI மற்றும் 4G மொபைல் அமைப்புகளில் இவரது பங்களிப்பிற்காக பால்ராஜுக்கு மார்கோனி விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டின் கடற்படை பாதுகாப்பிலும் அவரது பணி குறிப்பிட்டு சொல்லப்படும் ஒன்றாகத் திகழ்கின்றது. 

வயர்லஸ் தொழில்நுட்பத்தில் பால்ராஜின் பங்கு குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒன்றாகும். அவரது எம்ஐஎம்ஓ தொழில்நுட்பமே தற்போதைய மொபைல் மற்றும் WIFI அமைப்புகளுக்கு முன்னோடியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

மேலும் வயர்லஸ் ஸ்பெக்ட்ரம் செயல்திறனை அதிகரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான ஆய்வாளர்களுக்கும் இவரது திறன் ஆய்வு அடிப்படையாக அமைந்துள்ளது என்று சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் ஆப்டோஎலக்ட்ரானிக்ஸ் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனரும், மார்கோனி சொசைட்டியின் தலைவருமான பேராசிரியர் சர் டேவிட் பெய்ன் குறிப்பிட்டுள்ளார்  malaimalar.com

கருத்துகள் இல்லை: