தமிழ்
நாட்டில் உள்ள ஒரு தெலுங்கு அமைப்பு, வடிவேலு நடித்த தெனாலிராமன் படம்
கிருஷ்ணதேவராயரை அவமானப்படுத்துவதாக புரளியைக் கிளம்பி, தடை செய்ய வேண்டும்
என்று கிளம்பியிருக்கிறார்கள்.
கிருஷ்ணதேவராயன் என்ன பெரிய போராளியா?
1509 முதல் 1529 வரை 20 ஆண்டுகள் தென் இந்தியாவில் இருந்த மற்ற நாடுகள் மீது ரவுடித்தனம் செய்தவன். விஜயநகரப் பேரரசுவின் பெரிய ரவுடி கிருஷ்ணதேவராயன்.
1509 முதல் 1529 வரை 20 ஆண்டுகள் தென் இந்தியாவில் இருந்த மற்ற நாடுகள் மீது ரவுடித்தனம் செய்தவன். விஜயநகரப் பேரரசுவின் பெரிய ரவுடி கிருஷ்ணதேவராயன்.
பார்ப்பனியத்திற்கு
பல்லக்கு தூக்கி, ஜாதி முறையை கட்டி காத்து தெலுங்கு, கன்னடம், தமிழ்
பேசிய எளிய மக்களுக்கு எதிராக ஆட்சி செய்த களவானிதான் கிருஷ்ணதேவராயன்.
கிருஷ்ணதேவராயன் என்கிற இந்த மன்னனுக்கும்
அவனுக்கு ஆலோசனை சொல்பவராக வரும் காரிய கோமாளி தெனாலிராமன் என்கிற
பார்ப்பனருக்கும் உள்ள உறவே அதற்கு சாட்சி.
கண்டிப்பாக கிருஷ்ணதேவராயனை அவமானப்படுத்திதான் படம் எடுத்திருக்கனும்… ஆனால் பாவம் வடிவேலு புகழ்ந்துதான் எடுத்திருப்பார்.
கண்டிப்பாக கிருஷ்ணதேவராயனை அவமானப்படுத்திதான் படம் எடுத்திருக்கனும்… ஆனால் பாவம் வடிவேலு புகழ்ந்துதான் எடுத்திருப்பார்.
‘வடிவேலு, கிருஷ்ணதேவராயனை கேலி செய்து
படம் எடுத்திருக்கிறார்’ என்று கொதிக்கிறது தெலுங்கு அமைப்பு. உண்மையில்
கிருஷ்ணதேவராயனை முட்டாளாக நிரூபித்தது தெனாலிராமன் தான். அதற்கு சாட்சி
தெனாலிராமன் கதைகளே.
பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்ல தெரியாத
அறிவற்றவனாக கிருஷ்ணதேவராயன் தவித்த போது, அதை தீர்த்து வைத்து, அவனை
சிக்கலில் இருந்து மீட்டவன் தெனாலிராமன் என்கிற ‘பிராமணரே’; இதுவே
தெனாலிராமன் கதைகளின் உள்ளடக்கம்.
ஆக, கிருஷ்ணதேவராயனை ஒரு கூ முட்டையாக
சொல்லியிருக்கிறது, தெனாலிராமன் கதைகள். இவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக
இருந்தால் தெனாலிராமன் கதைகளுக்குத்தான் தெரிவிக்க வேண்டும்.
சாளுக்கிய மரபில் வந்த ‘புலிகேசி’
மன்னர்களை கேலி செய்து ‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’ என்று படம் வந்தபோது
அதற்கு எந்த எதிர்ப்பும் இல்லாமல் வாயைப் பிளந்து பார்த்தார்கள்.
காரணம் தமிழ் நாட்டில் பார்ப்பனியத்தை
தூக்கி நிறுத்தியதில் பெரிய பங்காற்றிய பல்லவ மன்னர்களின் எதிரி புலிகேசி.
அதன் காரணமாகவே கல்கி ‘சிவகாமியன் சபதம்‘ நாவலில் புலிகேசி மன்னர்களை
வில்லன்களாக சித்தரித்து எழுதினார்.
அதை தொடர்ந்து பிரதானமாக ஆனந்த விகடனும்
இன்னும் பல பத்திரிகைகளும் புலிகேசி மன்னர்களை கேலி செய்து ஜோக்குகள்
எழுதின. கேலி சித்திரங்கள் வரைந்தன.
அதன் தொடர்ச்சியாகதான் ஆனந்த விடகனில் பயிற்சி எடுத்த, சிம்புதேவன் ‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’ என்று பெயர் வைத்தார்.
அந்தப் படத்தின் வெற்றியின் காரணமாக அது போன்ற சூழலுக்காகவே வடிவேலு ‘தெனாலிராமன்’ களத்தை தேர்ந்தெடுத்திருக்கக் கூடும்.
அந்தப் படத்தின் வெற்றியின் காரணமாக அது போன்ற சூழலுக்காகவே வடிவேலு ‘தெனாலிராமன்’ களத்தை தேர்ந்தெடுத்திருக்கக் கூடும்.
இருந்தாலும் தமிழ் நாட்டில் தெலுங்கு
அமைப்புகள் என்ற பெயரில் இருக்கும் நாயுடு, ரெட்டி மற்றும் தெலுங்கு
பார்ப்பனர்களை உள்ளடக்கிய ஆதிக்க ஜாதிகளின் இந்த கூட்டமைப்பின்
எதிர்ப்புக்கு, கிருஷ்ணதேவராயனாகவும் தெனாலிராமனாகவும் வடிவேலு என்கிற
காமெடி நடிகர் நடிப்பதை அவர்கள் இழிவாக கருதுவது காரணமாக இருக்கலாம். ரஜனி,
கமல் நடித்திருந்தால் நன்றி தெரிவித்து விளம்பரம் வெளியிட்டு
இருப்பார்கள்.
ரஜனி, கமல் நடித்திருந்தால் நன்றி தெரிவித்து விளம்பரம் வெளியிட்டு இருப்பார்கள்.
இதை உறுதி செய்வதற்கு ஒரு சாட்சியும்
இருக்கிறது. சிவாஜி தெனாலிராமனாகவும் என்.டி. ராமாராவ்
கிருஷ்ணதேவராயனாகவும் நடித்து ‘தெனாலிராமன்’ என்ற பெயரில் படம்
வந்திருக்கிறது. அப்போது யாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
சரி. சமீபத்திலும் சில வருடங்களுக்கு
முன்னும் ஈழத் தமிழர்களுக்கு எதிராக படங்கள் வந்தபோது, அது குறித்து ஒரு
வார்த்தையும் கண்டிக்காமல் இருந்த தமிழ் நாட்டில் வாழும் இந்த தெலுங்கு
அமைப்புகள், தெனாலிராமன் படத்துக்கு எதிரா கிளம்பிட்டாங்க.
ஏற்கனவே இங்க இனவாத அரசியல் தீவிரமா எரிஞ்சிக்கிட்டிருக்கு. இதுல இவுங்க வேற எண்ணையை ஊத்துறாங்க..
போங்க.. போய் உங்க சமூகத்தில இருக்கிற
வசதியில்லாத புள்ளக் குட்டிகளையாவது படிக்க வையுங்க. அது முடியாட்டி
அவர்களை சுரண்டுவதையாவது நிறுத்துங்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக