வியாழன், 10 ஏப்ரல், 2014

3 ஆண்டுகளாக வளர்ச்சிப் பணிகளே இல்லை ஆனால் கொள்ளையர்களுக்கு பாதுகாப்பு ?

கருணாநிதி ஆட்சியில் 4 லட்சத்து 93 ஆயிரம் பெண்கள் வேலைக்குச் சென்றனர். ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் 3 லட்சத்து 78 ஆயிரம் பெண்கள்தான் வேலைக்குச் செல்கின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் திமுக மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து சென்னை பாடியில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொள்கிறார் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி. தமிழக மக்கள் மீது அதிமுக அரசுக்கு சிறிதளவும் அக்கறை இல்லை என மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி குற்றம்சாட்டினார்.
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகனை ஆதரித்து அய்யப்பன்தாங்கல், மாங்காடு, பட்டூர், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம் ஆகிய பகுதிகளில் கனிமொழி புதன்கிழமை திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டார்.
மாங்காடு பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தில் அவர் பேசியது:
தமிழகத்தில் அதிமுக அரசு பதவியேற்று 3 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் மாநிலத்தில் எந்த ஒரு வளர்ச்சிப்பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

ஆட்சியாளர்கள் மக்கள் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் செயல்பட்டு வருகின்றனர். கொலை, கொள்ளை என தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருகிறது.
ஆனால் கொள்ளையர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் இடமாகவே தமிழகம் விளங்குகிறது.
தமிழக மக்கள் மீது அதிமுக அரசுக்கு சிறிதளவும் அக்கறையில்லை. திமுக ஆட்சியில் ரூ.75 ஆயிரம் கோடி முதலீட்டில் ஏராளமான தொழிற்சாலைகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டன.
ஆனால் அதிமுக ஆட்சியில் எந்த தொழிற்சாலைகளும், தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படவில்லை.
மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சியை திமுக தலைவர் கருணாநிதியால் மட்டுமே உருவாக்க முடியும்.  எனவே தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் திமுகவை வெற்றிபெறச் செய்யுங்கள் என்றார் அவர்.
மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன், மாங்காடு பேரூராட்சித் தலைவர் எம்.ஆர்.சீனிவாசன், கெருகம்பாக்கம் ஊராட்சிமன்றத் தலைவர் வசீகரன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
பாடியில்...  இதேபோல் பாடியில் நடைபெற்ற பிரசாரத்தில் அவர் பேசியது: தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
ஓர் ஆய்வின்படி, திமுக தலைவர் கருணாநிதி ஆட்சியில் 4 லட்சத்து 93 ஆயிரம் பெண்கள் வேலைக்குச் சென்றனர். ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் 3 லட்சத்து 78 ஆயிரம் பெண்கள்தான் வேலைக்குச் செல்கின்றனர்.
ரேஷன் கடையில் எந்த பொருளும் வழங்கப்படுவதில்லை என்றார் அவர்.
மாவட்ட பொறுப்பாளர் சுதர்சனம், முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர். dinamani.com  

கருத்துகள் இல்லை: