ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

கலைஞர் கடும்தொனியில்: மோடி தமிழகத்துக்குள் நுழைய முடியாது.


கோவை: மோடி அல்ல, வேறு யாரும் இங்கு நுழைய முடியாது. மீறி வந்தால் கோடியில்தான் நிற்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோவையில் நேற்று நடந்த பிரசாரக் கூட்டத்தில் கலைஞர் கருணாநிதி பேசுகையில் இதுவே எனது கடைசிக் கூட்டமாக இருக்கலாம் என்று உருக்கமாக பேசினார். தனது பேச்சின்போது மோடிக்கும், பாஜகவுக்கும் அவர் நேரடியாகவே எச்சரிக்கையும் விடுத்தார். மோடி தமிழகத்துக்குள் நுழைய முடியாது.. கருணாநிதி திடீர் எச்சரிக்கை இதுகுறித்து கலைஞர் கருணாநிதி கூறுகையில், தமிழ்நாட்டிலே யார் வேண்டுமானாலும் நுழையலாம். அத்துமீறி நுழையலாம். ஆட்சி புரியவே எண்ணம் கொண்டு நுழையலாம் என்ற எண்ணம் மோடிகளுக்கும் ஏற்படாது. மோடி அல்ல, யாரும் நுழைய முடியாது. மீறி நுழைந்தால் ஒரு கோடியில் தான் நிற்க வேண்டும். மோடிகளுக்கு இங்கே வேலை இல்லை. இந்தியாவுக்கு இருக்கிற சிறப்பே, நாம் கட்டிக்காத்த உறவுகள்தான். நாம் கட்டிக்காத்த வீரம்தான். தேர்தலிலே தோற்காதவர்கள் யார்? தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் எல்லாம் இந்த நாட்டை ஆண்டு முடித்து விட்டார்களா? இல்லை. நம்முடைய லட்சியங்கள் ஈடேற வேண்டும் என்றால் மொத்த தமிழ் இனமும் அதற்கான போர்க்குரலை எழுப்ப வேண்டும் என்றார் கலைஞர்.
tamil.oneindia.in  

கருத்துகள் இல்லை: