ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

பா.ஜ.க. தலைவர்களில் அதிகமானோர் அசைவம்: நிதிஷ்குமார்

நமது நாட்டுக்கு பசுமைப் புரட்சி மற்றும் வெண்மைப் புரட்சிதான் தேவை. ஆனால் காங்கிரஸ் கட்சியோ, 'இளஞ்சிவப்பு புரட்சி' குறித்து கவலைப்படுகிறது. கால்நடைகளின் இறைச்சி ஏற்றுமதியை ஆதரிக்கிறது. இதனால் உரியகாலத்தில் மழை பெய்யாத நிலை ஏற்பட்டால், கால்நடைகள் இன்றி கிராமப்புற பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்'' என நேற்று முன்தினம் உத்தரபிரதேச பிரசார கூட்டத்தில் மோடி பேசியிருந்தார். இந்நிலையில், மோடியின் கருத்தை விமர்சித்துள்ள பீகார் முதல்வர் நிதிஷ்குமார்:- ''நான் கூட சுத்த சைவம்தான். ஆனால், பெரும்பாலான பா.ஜ.க. தலைவர்கள் அசைவம் என்று எனக்கு தெரியும். அவர்கள் தங்கள் தொப்பைகளை பூர்த்தி செய்ய விலங்குகளை கொல்ல விரும்புகின்றனர். நவாடா தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் கிரிராஜ் சிங் இறைச்சியை விரும்புபவர். தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியில் அவர் கால்நடை வளர்ப்புத்துறை மந்திரியாக இருந்தபோதே இது எனக்கு தெரியும். அவர் பதவியில் இருந்தபோது அவரது மாநிலத்தில் அசைவ பிரியர்களுக்கு இறைச்சியை தடையின்றி 'சப்ளை' செய்ய கால்நடை வளர்ப்பை ஊக்குவித்தார்.'' இவ்வாறு நிதிஷ்குமார் பேசினார். malaimalar.com

கருத்துகள் இல்லை: