வைகைப் புயலை மிரட்ட தெலுங்குக்காரர்களை தூண்டியவர் இவர்தானாமே?
காமெடிப் புயல் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடித்து வெளியாகும் புதிய படத்தை வெளிவரவிடாமல் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது, அந்த அரசியல் தலைவர்தான் என கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். 'ஏன்யா... அவரே தேர்தல்ல மகா பிஸியா இருக்கார். அவர் போயி இந்த மாதிரி சின்னத்தனமான வேலயச் செய்வாரா?' என்று திருப்பிக் கேட்காமலும் இல்லை நடுநிலையாளர்கள். ஆனால் அரசியல் தலைவரால், புயலின் அந்த பழைய நக்கல், நய்யாண்டி, எகத்தாள பிரச்சாரத்தை மறக்கவே முடியவில்லையாம். 'அவன் படம் வரவே கூடாது... அதுக்கு என்ன பண்ணனுமோ பண்ணுங்க... ' என்று தெலுங்கு அமைப்பின் தலைவர்களிடம் தெலுங்கிலேயே பேசித் தூண்டிவிட்டார் என அரசியல் தலைவர் மீது குற்றம் சாட்டுகின்றனர் வடிவேலு ஆதரவாளர்கள். இந்த உண்மை வெளிவந்ததால்தான், வைகைப் புயலுக்கு தமிழ் அமைப்புகள் பகிரங்கமாக ஆதரவளிக்க கிளம்பிவிட்டனவாம். சினிமா சங்கங்கள் அனைத்தும் வாயை மூடிக் கொண்டு சும்மா இருப்பதால், மேலும் சில அமைப்புகளும் வைகைப் புயலுக்கு ஆதரவாகக் களமிறங்கப் போகின்றனவாம். அரசியல் தலைவர் தூண்டிவிட்டார் என்றே வைத்துக் கொண்டாலும், அவரை ஆலகால விஷமாய் வெறுக்கும் ஆட்சி மேலிடம் ஏன் வைகைப் புயல் வீட்டுப் பாதுகாப்புக்கு அனுப்பிய போலீசை தடாலென வாபஸ் பெற்றுக் கொண்டது என்றுதான் புரியவில்லை!

tamil.oneindia.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக