புதன், 9 ஏப்ரல், 2014

அழகிரி :ஸ்டாலினுடனான உறவை பிரிக்க முடியாது ! சமரசம் ? நிலைமை புரிந்ததோ ? யாருக்கு ?

மு.க. ஸ்டாலினுடனான தனது உறவை யாராலும் பிரிக்க முடியாது. கொள்கையால் மட்டுமே பிரிந்துள்ளோம் என்று, சகோதர சண்டையால் திமுகவில் இருந்தே நிரந்தரமாக நீக்கப்பட்ட மு.க. அழகிரி கூறியுள்ளார். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்த அழகிரி, செய்தியாளர்களிடம் பேசுகையில், மு.க. ஸ்டாலின் எனது சகோதரர், அவருடனான தனது உறவை யாராலும் பிரிக்க முடியாது. கொள்கையால் மட்டுமே பிரிந்துள்ளோம் என்று கூறினார். மேலும், கருணாநிதி இல்லை என்றால், திமுகவே இல்லை என்றும், புதிய கட்சி துவங்கும் எண்ணம் எதுவும் தனக்கு இல்லை என்றும் அவர் பேசினார்.> நிகழ்ச்சியின் போது, மதிமுக வேட்பாளர் அழகு சுந்தரம் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் ஜே.எம். ஆருண் ஆகியோர் அழகிரியை சந்தித்து ஆதரவு கோரினர் dinamani.com


கருத்துகள் இல்லை: