வியாழன், 10 ஏப்ரல், 2014

Dinamalar: அ.தி.மு.க., - தி.மு.க., தலைமை திடீர் அதிர்ச்சி : கட்சியினரை முடுக்க வைத்த சர்வே முடிவு ?

லோக்சபா தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியும், தங்களது சாதக, பாதக அம்சங்களை ஆராயத் துவங்கி உள்ளன. அ.தி.மு.க., தரப்பில் உளவுத்துறை மூலமும், தி.மு.க., தரப்பில், தனியார் ஏஜன்சி மூலமும், நடத்தப்பட்ட சர்வேக்களில், இரு கட்சிகளுக்கும் அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் கிடைத்துள்ளதால்,'வீக்'கான தொகுதிகளில், அதிக கவனம் செலுத்தும் நடவடிக்கைகளில், இரு கட்சிகளும் இறங்கி உள்ளன. யாருக்கு வெற்றி?தமிழகத்தில், பலமுனைப் போட்டி நிலவினாலும், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., அணிகளுக்கு இடையே தான் கடும் போட்டி என்பது உறுதியாகி உள்ளது. இந்த மூன்று அணிகள் மோதும் தொகுதிகளில், யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பதை அறிய, ஆளும் கட்சி தரப்பில், ஏற்கனவே, உளவுத்துறை மூலமும் தனியார் ஏஜன்சிகள் மூலமும் சர்வே எடுக்கப்பட்டது. மம்மிஜியின் மீதமுள்ள இரண்டு ஆண்டுகாவது மக்கள் கொஞ்சம் நிம்மதியா இருக்கணும்னா அ.தி.மு.க. 10 தொகுதிகளுக்கு மேல ஜெயிக்கவே கூடாது. இல்லைன்னா ரெண்டு வருஷமும் தைய்ய தக்கா தான்.. மம்மிஜியின் ஆட்டத்தை சொன்னேன்..
அதில், ஆளும் கட்சிக்கு ஆதரவு உள்ள தொகுதிகளாக, 20 தொகுதி கள் அடையாளம் காட்டப்பட்டு உள்ளன. அதிலும், 13 முதல் 15 தொகுதிகளில் வெற்றி உறுதி என, தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகுதிகளில், கூடுதல் கவனம் செலுத்தினால் தான் கரை சேர முடியும் என்றும், ஆளும் கட்சித் தலைமையை எச்சரித்துள்ளதாக, அக்கட்சி வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்திருக்கின்றன. நாற்பதிலும் வெற்றி என்ற கோஷம் எழுப்பிய, ஆளும் கட்சிக்கு, இது அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், அதை சரிக்கட்டும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. இதன் காரணமாகவே, 'தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று, ஓட்டுக்கேட்க வேண்டும்' என, முதல்வர் இரண்டு அறிக்கைகள் வெளியிட்டார் என, கூறப்படுகிறது.

இதற்கிடையில், தி.மு.க., தரப்பில், தனியார் ஏஜன்சி மூலமாக, ஒரு சர்வே நடத்தப்பட்டுள்ளது. அந்த சர்வே முடிவுகள் நேற்று முன்தினம், கட்சித் தலைமையிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன. அதில், தென் மாவட்ட தொகுதிகள் மற்றும் மேற்கு மாவட்ட தொகுதிகளில், தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்றும், வட மாவட்டங்களில் தான் இக்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, தி.மு.க., வட்டாரம் கூறுகிறது.களத்தில் நிலவும் தற்போதைய நிலவரப்படி, நாகப்பட்டினம், ஸ்ரீபெரும்புதூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், விழுப்புரம், சிதம்பரம், நாமக்கல் ஆகிய தொகுதிகளில், தி.மு.க., முன்னணியில் இருப்பதாக, அந்த சர்வே முடிவில் கூறப்பட்டுள்ளது.மற்ற தொகுதிகளில், கூடுதல் கவனம் தேவைப்படுகிறது என்றாலும்,அங்கே நிலவும் கடுமையான போட்டியில், யார் வெற்றி பெறுவர் என்பதை, எளிதாக கணிக்க இயலாது என்றும், கடைசி நேரம் வரையில், முடிவு மாறுபடக்கூடும் எனவும், அந்த சர்வே முடிவுகள் கூறுவதாக, அறிவாலய வட்டாரத்தில் பேசப்படுகிறது.


கூடுதல் கவனம்



இன்னும் இருக்கும் சொச்ச நாட்களில் கூடுதல் கவனம் செலுத்தி னால், இழுபறியாக இருக்கும் தொகுதிகளில் இருந்து மேலும் 10 தொகுதி கள் வரையில் தி.மு.க., கூட்டணிக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்திருக்கும் அந்த கருத்துக் கணிப்பில், தொகுதி யில் என்னென்ன விஷயங்களை உடனடியாக செய்ய வேண்டும் என்றும் தெளிவாக குறிப்பிட்டிருப்பதாகவும், கட்சி வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிகின்றன.அதை அடுத்து, கட்சியின் பொருளாளர் ஸ்டாலின், உத்தரவுகளை இட்டு, கட்சியினரை முடுக்கி வருவதாகவும் தகவல்.

- நமது சிறப்பு நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: