பாபர் மசூதி இடிக்கப்பட்ட அதே இடத்தில் ராமர் கோயில் கட்டுவோம், பொது
சிவில் சட்டம் கொண்டுவரப்படும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தனி சிறப்பு
அந்தஸ்து அளிக்கும் சட்டத்தை வாபஸ் பெறுவது
பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் மூன்று சர்ச்சைக்குரிய பிரச்னைகள் இடம்பெற்றிருப்பதற்காக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் காரைக்குடியில் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
பா.ஜ.க தேர்தல் அறிக்கை வெளியிட்டிருப்பதன் மூலம் தமது உண்மையான முகத்தை வெளிகாட்டியிருக்கிறது. 3 சர்ச்சைக்குரிய பொருள்களை அரசு நிர்வாகத்தில் நுழைக்க மாட்டோம் என்று கூறிவிட்டு, தேர்தல் அறிக்கையில் மூன்று சர்ச்சைக்குரிய பிரச்னைகளைச் சேர்த்திருக்கிறார்கள்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட அதே இடத்தில் ராமர் கோயில் கட்டுவோம், பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தனி சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டத்தை வாபஸ் பெறுவது ஆகியவை.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், உயர் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளதையும் புறக்கணித்துவிட்டு ராமர் கோயிலை கட்டுவோம் என்கின்றனர். பொது சிவில் சட்டம், காஷ்மீருக்கு சிறப்பு தனி அந்தஸ்துக்கான ஷரத்தை ரத்து செய்வது என்பது சிறுபான்மையினரை அச்சுறுத்துவதாகும்.
இந்த 3 சர்ச்சைக்குரிய பொருள்களை தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க சேர்த்திருப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பா.ஜ.க. தனது 52 பக்க அறிக்கையில் இல்லாத ராமர் பாலத்தை சுட்டிக்காட்டி சேதுசமுத்திரத் திட்டத்தை மீண்டும் எதிர்த்திருக்கிறது. தமிழ்நாட்டில் பா.ஜ.க.-வின் சூழ்ச்சி இது. அதிமுகவும் சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்க்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது ன்றார் ப.சிதம்பரம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக