கடந்த நாடாளுமன்றத் தேர்த லில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி
பெற்றவர் ஜே.கே. ரித்தீஷ். இவர் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளராக
செயல்பட்டார். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி திமுகவில்
இருந்து அழகிரி நீக்கப்பட்ட பிறகு அவருடன் ரித்தீஷும் இணைந்து
நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதையடுத்து, அவரிடம் விளக்கம் கேட்டு திமுக
தலைமை நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், வியாழக் கிழமையன்று முதல்வர் ஜெய லலிதா முன்னிலையில் ஜே.கே
ரித்தீஷ், அ.தி.மு.க.வில் இணைந் தார். அவருக்கு முதல்வர் ஜெய லலிதா
அ.தி.மு.க. உறுப்பினர் அட்டை வழங்கினார்.
இதையடுத்து, ஜே.கே.ரித்தீஷ் நிருபர்களிடம் கூறியதாவது:
முதல்வர் ஜெயலலிதா முன்னி லையில் நான் அதிமுகவில் இணைந்துள்ளேன். தமிழகம்
முழுவதும் அதிமுகவுக்கு ஆதர வாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன்.
திமுகவை அண்ணா முதன் முதலில் உருவாக்கும் போது, திமுகவை யாராலும் அழிக்க
முடியாது. திமுககாரனால்தான் திமுகவை அழிக்க முடியும் என்றார். தற்போது,
அந்த வேலையை மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார்.
என்றைக்காவது ஒரு நாள் கலைஞர் கருணாநிதியை மு.க. ஸ்டாலின் வெளியேற்றுவார்.
தி.மு.கவை அழிக்கும் சகுனியாக மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார். திமுகவில்
அவருடைய ஆதரவா ளருக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அவரு டைய
ஆதரவாளர்கள்தான் வேட்பாளர்களாக அறிவிக்கப் பட்டுள்ளனர். மு.க.அழகிரியின்
முடிவு வலிமையாக இல்லை. உட்கட்சி தேர்தல் நேரத்தில் மு.க.அழகிரி வலிமையான
முடிவு கள் எடுத்திருந்தால் சிறப்பாக இருக்கும். இப்போது கூட, அவரிடம்
சொல்லி விட்டு தான் நான் அதிமுகவில் இணைந்துள் ளேன். நாடாளு மன்றத்
தேர்தலில் தி.மு.க.வுக்கு ஒரு இடம் கூட கிடைக் காது. என்னை போல் மேலும்
சில நிர்வாகிகளும் அதிமுகவில் விரைவில் இணைய வுள்ளனர்.
தமிழகத்தில் தற்போது மின்தடை என்று கூறும் திமுக வுக்கு 2 முறை மத்திய
அரசில் அங்கம் வகிக்கும் போது இது தெரியவில்லையா? இதற்காக என்ன
நடவடிக்கையை திமுக எடுத்தது? அடே ரிதீசு திமுக மதிய அரசில் அங்கம் வகித்த பொது நீயும்கூட திமுக MP தானே ? அதை நீயும் சேர்ந்து செய்திருக்க வேண்டியதுதானே ? அழகிரி செய்த மிக பெரிய தவறு உன்னையும் சாத்தூர் ராமச்சந்திரன் போன்றவர்களையும் அதிமுகாவில் இருந்து திமுகவுக்கு கொண்டு வந்ததுதான் ! தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் வாங்கக்கூட
நடவடிக்கை எடுக்கவில்லையே. tamil.thehindu.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக