
இதுபற்றி நயன்தாரா தரப்பில் விசாரித்தபோது, ‘தமிழில் 3 படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார். தமிழ் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை என்பதில் உண்மை இல்லை. தெலுங்கு ஹ¦ரோக்களை போலவே தமிழ் ஹீரோக்களும் அவருடன் நட்பாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு வந்து, தமிழில் நடித்தபோதுதான் இருமுறை அவர் காதலில் விழுந்தார். 2 காதல்களும் தோல்வி அடைந்தாலும் அந்த காதலை கொடுத்த தமிழகத்தை அவர் மறக்க மாட்டார். தென்னிந்திய படங்களில் எல்லா மொழியிலும் பேதம் பார்க்காமல் நடித்து வருகிறார்.
அறிமுகமான நாட்களிலிருந்து ஐதராபாத், சென்னை என்று மாறி மாறி ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். தற்போது அவர் ஐதராபாத்தில் நிரந்தரமாக தங்க முடிவு செய்துள்ளார் என்று தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் எதுவும் இல்லை' என்றனர்..tamilmurasu.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக