திருநெல்வேலி: ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய வீரபாண்டிய கட்டபொம்மனின் 254வது பிறந்த நாளான இன்று அவரது வாரிசுகள் இன்னமும் வறுமையில்
வாடுகின்றனர்.
பாஞ்சாலங்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு ஆட்சிபுரிந்த குறுநில மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் 1760ல் ஜன., 3ல் பிறந்தார். ஆங்கிலேயருக்கு கப்பம் செலுத்த மறுத்தார். ஆங்கிலேயருடன் போரிட்டு, 1799 அக்.,16ல், நெல்லை அருகே கயத்தாறில் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டார். கட்டபொம்மனை தொடர்ந்து அவரது தம்பிமார் ஊமைத்துரை, துரைசிங்கம் உள்ளிட்டோரும் ஆங்கிலயேருக்கு எதிராக போராடினர். அவர்களும் தூக்கிலிடப்பட்டனர். நான் இவரை பார்த்து பேசி இருக்கிறேன். இவர் பகல் முழுவதும் கோட்டையில்தான் இருக்கிறார். குறி சொல்கிறார். நாம் ஏதேனும் பணம் கொடுத்தால் வாங்கிகொள்கிறார். அனால் அங்கு வெறும் வறண்ட பூமிதான். பிழைப்புக்கு வழி செய்து கொடுக்க இந்த அரசாங்கம் முன்வர வேண்டும். இந்த அரசியல்வாதிகளுக்கு இதை பற்றிய கவலை ஏது. மேடையில் மட்டும் நாங்கள் கட்டபொம்மன் என்று பீத்தி கொள்வார்கள். கேவலமான பிழைப்பு Sampathkumar Sampath - Karur,இந்தியா
பாஞ்சாலங்குறிச்சி என்ற ஜமீனே இல்லாமல் செய்வதற்காக,
அங்கு கள்ளிச்செடிகளையும், எருக்கஞ்செடிகளையும் ஆங்கியேர்கள்
நட்டுவைத்தனர். அவர்களது வழித்தோன்றல்களை திருச்சியில் 70 ஆண்டுகளுக்கும்
மேலாக சிறைப்படுத்தினர். சுதந்திரத்திற்கு பிறகுதான் கட்டபொம்மனின்
வாரிசுகள் சொந்த பூமியை பார்த்தனர். 1974ல் தி.மு.க.,ஆட்சியின்போது,
கருணாநிதி, தகர்ந்து கிடந்த நிலத்தில் மீண்டும் கோட்டை யை எழுப்பினார்.
அவரது வாரிசுகளுக்கு வீடுகள் கட்டித்தரப்பட்டன. ஆனால் இன்றைக்கும்
கட்டபொம்மனின் வாரிசுகள் வறுமையில்தான் உழல்கின்றனர்.
கட்டபொம்மனின் நேரடி வாரிசான வீமராஜா என்ற கட்டபொம்முதுரை, தமது பூட்டனார் விட்டுச்சென்ற கோட்டையிலேயே தவம் கிடக்கிறார். அவரை கோட்டையில் சந்தித்தபோது, ''கட்டபொம்மன் ஆண்ட கோட்டை சுமார் 36 ஏக்கர். தற்போது சுமார் ஆறு ஏக்கரில்தான் கோட்டையும், சுற்றுலா தலமும் அமைந்துள்ளது. கோட்டை உள்ளிட்ட அனைத்து பகுதியும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. நாங்களும் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டோம் என மற்றவர்கள் கூறிக்கொண்டாலும், ஆங்கிலேய தளபதிகளை வீழ்த்தி இங்கேயே சமாதியாக்கியது பாஞ்சாலங்குறிச்சியில்தான். 1801ல் ஊமைத்துரை படையினரை எதிர்கொள்ள முடியாமல் ஆங்கிலேயே தளபதிகள் ஜான் கேம்பல், உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் பலியாயினர். அவர்களது கல்லறை இங்கே உள்ளது. இன்றளவும் வரலாற்றின் நினைவுச்சின்னமாகவும், கட்டபொம்மனின் தீரத்தை சொல்வதாகவும் உள்ளது. ஆனால்அந்த கல்லறையையும் சமூகவிரோதிகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
சுமார் 200 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு பேணிபாதுகாக்கப்படவில்லை. 36 ஏக்கரையும் வேலியிட்டு தொல்லியல் துறை பாதுகாப்பதற்காக, நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் எதையும் தொல்லியல் துறை பாதுகாக்கவில்லை. மேலும் கட்டபொம்மன் வாரிசுகள் உயர்கல்வி கற்க வாய்ப்பில்லை. எனவே பாஞ்சாலங்குறிச்சி கோட்டையிலேயே எங்களுக்கு வேலைவாய்ப்பளிக்கப்பட்டது. முன்பு 12 பேர் வேலைபார்த்த கோட்டையில் தற்போது நான்குபேர் மட்டுமே உள்ளனர். வேலையாட்கள் நியமிக்கப்படாததால், தோட்டமும், செடிகளும் பராமரிக்கப்படவில்லை. எங்களுக்கு அரசு வழங்கும் பென்சன் 2 ஆயிரம் ரூபாய்தான். 1974ல் அரசு கட்டித்தந்த வீடுகளும் தற்போது வானம் பார்த்து நிற்கின்றன.எனவே தோட்டவேலை உள்ளிட்ட அடிப்படை வேலையை வழங்கினால், பூட்டனாரின் கோட்டையை பாதுகாப்போம்,'' என்றார் வீமராஜா. வீரபாண்டிய கட்டபொம்மன், தீவிர முருகபக்தர். திருச்செந்தூரில் பூஜை முடிந்தபிறகுதான் கோட்டையில் உணவு உட்கொள்வதை வழங்கமாக கொண்டிருந்தார். வீமராஜாவும் தீவிர முருக பக்தர்தான். திருச்செந்தூர் முருகன் கோயிலில், கட்டபொம்மனின் பெயரில் உள்ள ஒருமண்டகப்படிக்கு வீமராஜாதான் இன்றளவும் தலைவர். அதெல்லாம் சரி... ஆனால் தினசரி சாப்பாட்டிற்கு...
பாஞ்சாலங்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு ஆட்சிபுரிந்த குறுநில மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் 1760ல் ஜன., 3ல் பிறந்தார். ஆங்கிலேயருக்கு கப்பம் செலுத்த மறுத்தார். ஆங்கிலேயருடன் போரிட்டு, 1799 அக்.,16ல், நெல்லை அருகே கயத்தாறில் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டார். கட்டபொம்மனை தொடர்ந்து அவரது தம்பிமார் ஊமைத்துரை, துரைசிங்கம் உள்ளிட்டோரும் ஆங்கிலயேருக்கு எதிராக போராடினர். அவர்களும் தூக்கிலிடப்பட்டனர். நான் இவரை பார்த்து பேசி இருக்கிறேன். இவர் பகல் முழுவதும் கோட்டையில்தான் இருக்கிறார். குறி சொல்கிறார். நாம் ஏதேனும் பணம் கொடுத்தால் வாங்கிகொள்கிறார். அனால் அங்கு வெறும் வறண்ட பூமிதான். பிழைப்புக்கு வழி செய்து கொடுக்க இந்த அரசாங்கம் முன்வர வேண்டும். இந்த அரசியல்வாதிகளுக்கு இதை பற்றிய கவலை ஏது. மேடையில் மட்டும் நாங்கள் கட்டபொம்மன் என்று பீத்தி கொள்வார்கள். கேவலமான பிழைப்பு Sampathkumar Sampath - Karur,இந்தியா
கட்டபொம்மனின் நேரடி வாரிசான வீமராஜா என்ற கட்டபொம்முதுரை, தமது பூட்டனார் விட்டுச்சென்ற கோட்டையிலேயே தவம் கிடக்கிறார். அவரை கோட்டையில் சந்தித்தபோது, ''கட்டபொம்மன் ஆண்ட கோட்டை சுமார் 36 ஏக்கர். தற்போது சுமார் ஆறு ஏக்கரில்தான் கோட்டையும், சுற்றுலா தலமும் அமைந்துள்ளது. கோட்டை உள்ளிட்ட அனைத்து பகுதியும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. நாங்களும் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டோம் என மற்றவர்கள் கூறிக்கொண்டாலும், ஆங்கிலேய தளபதிகளை வீழ்த்தி இங்கேயே சமாதியாக்கியது பாஞ்சாலங்குறிச்சியில்தான். 1801ல் ஊமைத்துரை படையினரை எதிர்கொள்ள முடியாமல் ஆங்கிலேயே தளபதிகள் ஜான் கேம்பல், உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் பலியாயினர். அவர்களது கல்லறை இங்கே உள்ளது. இன்றளவும் வரலாற்றின் நினைவுச்சின்னமாகவும், கட்டபொம்மனின் தீரத்தை சொல்வதாகவும் உள்ளது. ஆனால்அந்த கல்லறையையும் சமூகவிரோதிகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
சுமார் 200 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு பேணிபாதுகாக்கப்படவில்லை. 36 ஏக்கரையும் வேலியிட்டு தொல்லியல் துறை பாதுகாப்பதற்காக, நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் எதையும் தொல்லியல் துறை பாதுகாக்கவில்லை. மேலும் கட்டபொம்மன் வாரிசுகள் உயர்கல்வி கற்க வாய்ப்பில்லை. எனவே பாஞ்சாலங்குறிச்சி கோட்டையிலேயே எங்களுக்கு வேலைவாய்ப்பளிக்கப்பட்டது. முன்பு 12 பேர் வேலைபார்த்த கோட்டையில் தற்போது நான்குபேர் மட்டுமே உள்ளனர். வேலையாட்கள் நியமிக்கப்படாததால், தோட்டமும், செடிகளும் பராமரிக்கப்படவில்லை. எங்களுக்கு அரசு வழங்கும் பென்சன் 2 ஆயிரம் ரூபாய்தான். 1974ல் அரசு கட்டித்தந்த வீடுகளும் தற்போது வானம் பார்த்து நிற்கின்றன.எனவே தோட்டவேலை உள்ளிட்ட அடிப்படை வேலையை வழங்கினால், பூட்டனாரின் கோட்டையை பாதுகாப்போம்,'' என்றார் வீமராஜா. வீரபாண்டிய கட்டபொம்மன், தீவிர முருகபக்தர். திருச்செந்தூரில் பூஜை முடிந்தபிறகுதான் கோட்டையில் உணவு உட்கொள்வதை வழங்கமாக கொண்டிருந்தார். வீமராஜாவும் தீவிர முருக பக்தர்தான். திருச்செந்தூர் முருகன் கோயிலில், கட்டபொம்மனின் பெயரில் உள்ள ஒருமண்டகப்படிக்கு வீமராஜாதான் இன்றளவும் தலைவர். அதெல்லாம் சரி... ஆனால் தினசரி சாப்பாட்டிற்கு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக