சனி, 4 ஜனவரி, 2014

தி.மு.க. வில் அழகிரி ஸ்டாலின் கோஷ்டி மோதல் அப்பட்டமாக வெடித்துள்ளது.

மதுரை: மதுரையில் மாநகர் தி.மு.க., அமைப்பு கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது. அனைத்து நிர்வாகிகளும் இதனால் பதவி இழப்பதுடன் அதில் அழகிரி ஆதரவாளர்கள் அனைவரும் ஓரம் கட்டப்படுவதற்கு ஒரு முன்னோட்ட நடவடிக்கையாக தலைமை கழகம் களத்தில் இறங்கியிருப்பதாகவும் தி.மு.க., தொண்டர்கள் கூறுகின்றனர். இதனால் இரு அணியினர் இடையே கோஷ்டி மோதல் அப்பட்டமாக வெடிக்க துவக்கியுள்ளது.
மதுரையை பொறுத்தவரை தி.மு.க., வில் ஸ்டாலின், அழகிரி என கோஷ்டிகளாக செயல்பட்டு வந்தனர். ஸ்டாலின் ஆதரவாளர்கள் நடத்தும் கட்சி கூட்டத்தில் அழகிரி ஆதரவாளர்கள் பங்கேற்பதில்லை. சில இடங்களில் இரு தரப்பினரும் மோதிக்கொள்வதும் வழக்கமாக இருந்து வந்தது. இவர்களின் மோதல் இம்முறை பாரதூரமானதாக தான் தெரிகிறது . திமுக மெல்ல மெல்ல அதிமுகவை போல ஒரு ஜால்ரா கட்சியாகி  கொண்டு வருகிறது, அது ஜெயாமயம் இது ஸ்டாலின் மயம், கொள்கை கோட்பாடெல்லாம் கோவிந்தா 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் அழகிரி பங்கேற்கவில்லை. இது குறித்தும் விமர்சனம் எழுந்தது. நான் எப்போதும் இது போன்ற கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என்றார். சில நாட்களுக்கு முன்னர் கூட போட்டி பொதுக்குழுவை கூட்டப் போவதாக கட்சிக்குள் முணுமுனுப்பு இருந்து வந்தது. திருச்சியில் கூட சுவரொட்டி ஒட்டப்பட்டது. இந்நிலையில் வரும் ஜனவரி 30 ம் தேதி அழகிரி பிறந்தநாளும், மார்ச்- 1 ம் தேதி ஸ்டாலின் பிறந்தநாளும் கொண்டாடப்படவிருந்தது. இதற்கான விளம்பரங்களில் அழகிரியின் பெயர், பெயரளவில் கூட இடம் பெறவில்லை. அழகிரியின் வாழ்த்து போஸ்டரில் ஸ்டாலின் படம் இடம் பெறவில்லை. மோதல் உச்சக்கட்டத்தை எட்டி வந்தது.

இது நஞ்சு கலக்கும் செயல்: கருணாநிதி: தி.மு.க., தலைவர் கருணாநிதி போஸ்டர் குறித்து கடந்த 3 ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், விஷமத்தனமானது, விஷக்கருத்தை தி.மு.க.,வின் மீது பரப்பவதற்கு சிலர் செய்த திட்டமிட்ட சதி என்றும், லோக்சபா தேர்தல் நடக்கவிருக்கும் நேரத்தில் இது நஞ்சு கலக்கும் செயல் என்றும் நான் கருதுவதால் இவர்கள் மன்னிப்பு கோராவிட்டால் தி.மு.க.,வில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க., கழக அமைப்புகள் அனைத்தும் கலைக்கப்படுவதாக தி.மு.க., தலைமை கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து கட்சியின் பொதுச்செயலர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:



கட்டுப்பாட்டை குலைப்பதா ? தலைவர் கலைஞர் கருணாநிதியின் அறிவிப்பை மீறி கட்சியின் கட்டுப்பாட்டை குலைக்கும் வகையில் சிலர் நடப்பதால் மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க., அமைப்பு கலைக்கப்படுகிறது. இதன்படி பகுதி கழகம், வட்ட கழக நிர்வாகிகள் அனைவரும் பதவி இழக்கின்றனர். முறைப்படி அமைப்பு தேர்தல் நடைபெறும்வரை கட்சியை வழிநடத்த தற்காலிக பொறுப்புக்குழு அமைக்கப்படுகிறது. இந்த குழுவுக்கு கோ.தளபதி தலைமை வகிப்பார். இவரது தலைமையின் கீழ் முன்னாள் எம்.எல்.ஏ., வேலுச்சாமி, முன்னாள் மேயர் குழந்தை வேலு, ஜெயராம், பாக்கியநாதன், சேது முத்துராமலிங்கம், சின்னம்மாள் ஆகியோர் பொறுப்பு குழுவில் இடம் பெறுகின்றனர். இந்த குழுவினர் கட்சியை வழிநடத்தி செல்வர். இவ்வாறு அன்பழகன் கூறியுள்ளார்.

தற்போது நியமிக்கப்பட்டுள்ள பொறுப்புக்குழுவினர் அனைவரும் ஸ்டாலின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த அறிவிப்பை அடுத்து அழகிரி ஆதரவாளர்கள் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இரு அணிகள் இடையே இருந்த கோஷ்டி மோதல் வெட்ட வெளிச்சமாக வெடித்துள்ளது.அடுத்து மதுரை தி.மு.க.,வில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.



அழகிரி ஆதரவாளர்கள் கூண்டோடு நீக்கம் ஏன்?

தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி இன்று(ஜூன் 5) பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனால் அவரது ஆதரவாளர்கள் பல நகரங்களில் தி.மு.க.,வின் இலக்கியமே, இலக்கணமே, எங்கள் தலைவியே, ஜான்சி ராணியே என போஸ்டர்களை அச்சிட்டு ஒட்டினர். இதனால் அதிர்ச்சியுற்ற அழகிரி ஆதரவாளர்கள், அவரது(அழகிரி) பிறந்த நாளுக்கு 25 நாட்கள் இருக்கும் நிலையில் மதுரை முழுவதும் வாழ்த்து போஸ்டர்களை ஒட்டினர்.

பொதுக்குழு போஸ்டர்கள்: 'கிங் ஆப் தமிழ்நாடு' என்ற அடைமொழியுடன் தேவர் மகன் திரைபடத்தில் நடிகர் கமல், நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் போஸில் அழகிரியை சித்தரித்திருந்தனர். சிலரோ, இனி ஒரு விதி செய்வோம் என்ற தலைப்பில் 'ஜன., 30ல் தி.மு.க., பொதுக்குழு கூட்டம்' என போஸ்டர் ஒட்டினர். தி.மு.க., மாநாடு நடக்க உள்ள திருச்சியிலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.
சென்னை பொதுக்குழுவில் அழகிரி பங்கேற்காத நிலையில், இந்த புதிய பொதுக்குழு போஸ்டர் கட்சி தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதை கண்டித்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி, 'இப்படி விஷமத்தனம் செய்தவர்கள் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்' என அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் அழகிரி ஆதரவாளர்கள் அதிகம் பொறுப்பு வகித்த, மாநகர் அமைப்பையே கூண்டோடு கலைத்து 'அதிர்ச்சி வைத்தியம்' தந்துள்ளது தலைமை.

95 சதவீதம் பேர் அழகிரி ஆதரவாளர்கள்: மதுரை மாநகர் அமைப்பில் 9 பகுதி செயலாளர்களில் ஜெயராமன், சேது தவிர மற்றவர்கள் அழகிரி ஆதரவாளர்கள். 10 பொதுக்குழு உறுப்பினர்களில் 8 பேர், 5 தலைமை செயற்குழு உறுப்பினர்களில் வேலுச்சாமி, வி.கே.குருசாமி தவிர மற்றவர்கள், 72 வார்டு செயலாளர்களில் 65 பேர், 3 துணை செயலாளர்கள், அவை தலைவர் இசக்கிமுத்து, பொருளாளர் பாண்டியன் ஆகியோர் அழகிரி ஆதரவாளர்கள். மாநகர் செயலாளரான தளபதி முன்பு அழகிரியின் ஆதரவாளர். ஆனால், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அவர் ஸ்டாலின் அணிக்கு தாவி விட்டார்.மாநகர செயலாளர் என சில முக்கிய பதவிகள் தவிர, 95 சதவீதம் பேர் அழகிரி ஆதரவாளர்களாக இருந்த நிலையில், இப்போது அவர்கள் அனைவரும் பதவி இழந்துள்ளனர்.
தலைமையின் ஓரவஞ்சனை: பதவி இழந்த அழகிரி ஆதரவாளர்கள் கூறியதாவது: கட்சிக்காக உழைத்த எங்களை வெளியேற்றும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து தென் மண்டல அமைப்பு செயலாளர் அழகிரியை கலந்து ஆலோசிக்காமல், அவசரமாக நீக்க வேண்டிய அவசியம் என்ன? வழக்கமாக அழகிரி பிறந்த நாளையொட்டி தென் மாவட்டங்களிலிருந்து ஏராளமான தொண்டர்கள் திரள்வர். ஆயிரக்கணக்கானோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். 'தி.மு.க.,பொதுக்குழுவை போல' கூட்டம் கூடும் என்பதற்காக தான் அந்த மாதிரி போஸ்டர் அச்சிட்டிருந்தனர். அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. பெரிய குற்றமும் இல்லை. மார்ச் மாதம் நடக்கவுள்ள ஸ்டாலின் பிறந்த நாளுக்காக இப்போதே போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். எங்கள் மீது மட்டும் நடவடிக்கை பாய்வது ஏன்? இதுகுறித்து அழகிரியின் முடிவுக்காக காத்திருக்கிறோம், என்றனர்.

மீண்டும் பிளவுபடுமா: தி.மு.க.,வில் தற்போது எழுந்துள்ள இந்த பிரச்னை, மீண்டும் ஒரு பிளவை ஏற்படுத்துமோ என்ற சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது தினமலர்.கம 

கருத்துகள் இல்லை: