உள்துறை மந்திரி முகமது பின் நயீப்புக்கு பட்டத்து இளவரசர் சல்மான் அனுப்பியுள்ள தகவல் அறிக்கையில், ‘‘ஷரியத் சட்டம் (இஸ்லாமிய சட்டம்) எந்தவித விதிவிலக்குமின்றி அனைவருக்கும் பொருந்தும். பெரியவர், சிறியவர், பணக்காரர், ஏழை என்று வித்தியாசம் எல்லாம் கிடையாது. நீதித்துறை தீர்ப்பில் தலையிடுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. அதுதான் இந்த நாட்டின் பாரம்பரியம். ஷரியத் சட்டத்தை நாம் அனைவரும் பின்பற்றித்தான் ஆக வேண்டும்’’ என கூறி உள்ளார்.இதில் ஏதோ உள்குத்து இருப்பது போல தெரிகிறது ! அரச குடும்பங்கள் என்றாலே சதி வலைகள்தானே
எனவே சவூதி இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சவூதி அரேபியாவில் கொடிய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது வாடிக்கை. இந்த ஆண்டில், கடந்த மே மாதம் வரையில் அங்கு 47 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொதுவாக மன்னர் குடும்பத்தில் யாருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுவதில்லை. வெகு அபூர்வமாகத்தான் இது நடக்கும்.dailythanthi.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக