மக்கள் பாதுகாப்புக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி
தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கட்சியின் தலைவராக தேசிய அம்பேத்கர் வக்கீல்கள்
சங்கத்தின் பொதுச் செயலாளர் பெருமாள் பொறுப்பேற்கிறார். பிரபர சமூக சேவகர்
டிராபிக் ராமசாமி அவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய கட்சியின் உதயம் குறித்த செய்தியை திருச்சியில் வைத்து
செய்தியாளர்களிடம் தெரிவித்தார் ராமசாமி. அங்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து
கொள்வதற்காக வந்த டிராபிக் ராமசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழ்நாட்டில் பெருகி வரும் ஊழலை முற்றிலும் ஒழிக்கும் வகையில் புதிய
அரசியல் கட்சி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கட்சிக்கு மக்கள்
பாதுகாப்பு கழகம் என்று பெயர் சூட்டப்படவுள்ளது.
இந்த கட்சியின் தலைவராக தேசிய அம்பேத்கர் வக்கீல்கள் சங்க பொதுச்செயலாளர்
பெருமாள் பதவி ஏற்பார்.
மேலும் இந்த கட்சி வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி
மாநிலங்களில் 40 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த
முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் தென் சென்னை தொகுதியில் புதிய கட்சியின்
அவைத்தலைவராக இருக்கும் நான் போட்டியிட உள்ளேன்.
புதிய அரசியல் கட்சியான மக்கள் பாதுகாப்பு கழகம் திராவிட கட்சிகளுக்கு
மாற்றாக அமையும். தற்போதுள்ள அதிமுக, திமுக கட்சிகளின் ஆதிக்கத்தை
முடிவுக்கு கொண்டு வருவதே எங்கள் கட்சிகளின் முக்கிய நோக்கமாகும்.
இது நடைமுறையில் சாத்தியமா என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர். மக்களிடம்
இந்த 2 கட்சிகளின் மீதான நல்லெண்ணம் வெகுவாக குறைந்து வருகிறது. எனவே
தற்போது இல்லாவிட்டாலும் அடுத்த சில ஆண்டுகளுக்குள் எங்கள் நோக்கம்
நிச்சயம் நிறைவேறும்.
திருச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நான் திருவானைக்காவல்,
ஸ்ரீரங்கம், சமயபுரம் ஆகிய பகுதிகளை பார்வையிட்டேன். மேல சிந்தாமணி
பகுதியில் காவிரி ஆற்றில் கழிவு நீர் சேர்வதை தடுக்குமாறு மாநகராட்சி
ஆணையரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். அவரும் 15 நாளில் இதனை நிறைவேற்றி
தருவதாக உறுதியளித்துள்ளார்.
தவறினால் சட்ட ரீதியாக நிர்பந்தித்து கோர்ட் உதவியுடன் அதனை நிறை
வேற்றுவேன். சமயபுரம் 4 ரோட்டில் இருந்து கோவில் வரை உள்ள அனைத்து
ஆக்கிரமிப்புகளையும் அப்புறப்படுத்த தகுந்த நடவடிக்கைகளை கோர்ட் மூலம்
எடுக்கப்படும்.
ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்சனை குறித்து பல்வேறு ஆவணங்களை சேகரித்துள்ளேன்.
அவற்றில் உள்ள விதிமுறைகளின் படி பயனாளிகளுக்கு நிச்சயம் கிடைக்க ஆவண
செய்வேன் என்றார் அவர்
tamil.oneindia.in உதயம் அவைத்தலைவர்
tamil.oneindia.in உதயம் அவைத்தலைவர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக