தி ஹேக், கம்போடியா-தாய்லாந்து எல்லையில் உள்ள ப்ரிய விஹார் என்ற இந்துக் கோவில் 900
ஆண்டுக் கால பாரம்பரியத்தைக் கொண்டது. இந்தக் கோவிலைச் சுற்றியுள்ள
இடத்தின் மீது இரு நாடுகளும் உரிமை கொண்டாடி வந்தன. 1962ல் ஏற்பட்ட உரிமைப்
பிரச்சினையின்போது கோவில் கம்போடியாவைச் சேர்ந்தது என்று தீர்ப்பு
வழங்கப்பட்டது. ஆனால் அந்த தீர்ப்பில், சுற்றியிருந்த இடம் பற்றிக்
குறிப்பிடப்படவில்லை.
கடந்த இரண்டு வருடங்களுக்குமுன் இந்த நிலத்தின் மீதான உரிமை குறித்து
தாய்லாந்து மறுபடியும் தொல்லை தர ஆரம்பித்தது. எனவே, கம்போடியா அரசு தி
ஹேகில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தின் உதவியை நாடியது.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பை
வெளியிட்டுள்ளது. அப்போது, கோவிலைச் சுற்றியுள்ள நிலமும் கம்போடிய அரசின்
கட்டுப்பாட்டின் கீழ்வரும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தாய்லாந்து நாட்டின் ராணுவமும் காவல்துறையும் அங்கிருந்து விலக்கிக்
கொள்ளப்பட வேண்டும் என்று சர்வதேச நீதிமன்ற நீதிபதி பீட்டர் டோம்கா தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.maalaimalar.com
கொள்ளப்பட வேண்டும் என்று சர்வதேச நீதிமன்ற நீதிபதி பீட்டர் டோம்கா தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.maalaimalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக