விஷால் தயாரித்து நடித்திருக்கும் படம் ‘பாண்டிய நாடு‘.
இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதையொட்டி நேற்று பட குழுவினர்
நிருபர்களுக்கு
பேட்டி அளித்தனர்.
அப்போது பாரதிராஜா கூறியதாவது:
‘பாண்டிய
நாடு படத்தில் என்னை விஷால் தந்தையாக நடிக்கவேண்டும் என்று சுசீந்திரன்
கேட்டபோது முதலில் மறுத்துவிட்டேன். பிறகு சுசீந்திரன்
மீதுள்ள மரியாதை காரணமாக நடிக்க ஒப்புக்கொண்டேன். அதற்கு நல்ல பாராட்டு கிடைத்தது. கல்யாணசுந்தரமாக வாழ்ந்திருக்கிறார் என்று
விமர்சனத்தில்
குறிப்பிடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். அப்பாவாக நான்தானே
நடித்திருக்கிறேன். வேறு பெயரை போட்டிருக்கிறார்களே
என்று ஷாக் ஆனேன். பிறகுதான் அதுதான் படத்தில் எனது கதாபாத்திரத்தின் பெயர் என்று தெரிந்தது. கதாபாத்திரத்தின் பெயர்கூட தெரியாமல்
சுசீந்திரன் சொன்னபடி நடித்தேன்.
இங்கு பேசிய விஷால் தான் கடந்த 6 வருடமாக வெற்றிபடம் கொடுக்கவில்லை என்று வெளிப்படையாக பேசினார். எந்த ஹீரோவும் உண்மை
பேசுவதில்லை. ஆனால் விஷால் உண்மை பேசி இருக்கிறார். ஒரு சிலர் நடிகர்களை தூண்டிவிட்டு அரசியலில் இழுத்துவிடுகிறார்கள். அப்படி செய்வதை
நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு பாரதிராஜா கூறினார். விஷால், சுசீந்திரன், லட்சுமிமேனன், டி.இமான் உடனிருந்தனர்.
tamilmurasu.org

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக