நவம்பர் 2-ம் தேதி சனிக்கிழமை அன்று பிரான்சில் உள்ள
பிரித்தானியா பகுதி மக்கள் சுமார் 30 ஆயிரம் பேர், அரசு விதித்திருக்கும்
சிறப்பு சாலை வரிக்கு (சுற்றுச் சூழல் வரி) எதிராகவும், பெருகி வரும்
விலைவாசி உயர்வு, வேலை இல்லாத் திண்டாட்டத்தை எதிர்த்தும் எழுச்சி மிகு
போராட்டத்தை நடத்தினர். மக்களின் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து
சுற்றுச்சூழல் வரியை நிறுத்திக் கொள்வதாக பிரான்சு அரசு அறிவித்துள்ளது.
பிரான்சு நாட்டின் வடபகுதியில் உள்ள பிரித்தானியாவின் பெரும்பான்மை மக்கள் விவசாயிகள். விவசாய விளை பொருட்களை பிரான்சின் பிற பகுதிகளுக்கு விற்பதும், ஏற்றுமதியும் தான் இவர்களின் மிக முக்கிய வருமானம்.
முதலாளிகளின் லாப வெறியால் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நாடான பிரான்சு, அந்தப் பொருளாதார நெருக்கடிகளின் சுமையை சாதாரண மக்களின் மீது ஏற்றி கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக வேலை வெட்டு, விலைவாசி உயர்வு, புதிய வரி விதிப்புகள் அதிகமாகிக் கொண்டிருகின்றன. அவற்றில் ஒன்று தான் சுற்றுச்சூழல் வரி. 3.5 டன் எடைக்கு மேல் பொருட்களை (குறிப்பாக விவசாய விளை பொருட்கள்) ஏற்றிக் கொண்டு போகும் வணிக வாகனங்கள் சிறப்பு “சுற்றுச்சூழல் வரி” கட்ட வேண்டும்.
இந்த சுற்றுச்சூழல் வரி என்பது, அதிகமாக விவசாய விளைபொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், சாலைகளையும், எரிபொருட்களையும் பயன்படுத்துவதால் சுற்றுச் சூழல் பாதிப்படைவதை காரணம் காட்டி விதிக்கப்படுகிறது. இந்த வரியின் மூலம் திரட்டப்படும் பணம், பிரான்சு நாட்டின் சுற்றுச் சூழலை மேம்படுத்த உதவும் திட்டங்களில் முதலீடு செய்யப்படும்.
இதைக் கேட்ட பிரித்தானியா விவசாயிகள் கொதித்து விட்டனர். அந்தப் பகுதியில் பெரும்பாலானோர் சாதாரண விவசாயிகள் தான். பிரித்தானியா பகுதியில் பெரிய அளவு கட்டுமான வசதிகள் செய்யப்படவில்லை, ரயில் சேவையும் குறைவு. விளைச்சல் பொருட்களை வேறு வழியே இல்லாமல் சாலை வழியில் வாகனங்களில் தான அனுப்ப முடியும். சில நேரத்தில் பல விவசாயிகள் ஒன்றாக இணைந்து கூட்டாக ஒரு வண்டியில் மொத்த விளை பொருட்களையும் அனுப்புவார்கள். இப்படி கூட்டாக அனுப்புவது ஒரு விதத்தில் எரிபொருளை மிச்சப்படுத்தும். அதுவும் அங்கீகரிக்கப்பட்ட எடையளவு தான் ஏற்றவும் முடியும் என்பது கண்காணிக்கப்படுகிறது. இருந்தும் சாலையில் செல்ல சிறப்பு வரி என்றால்?
ஏற்கனவே விலைவாசி உயர்வு, நாட்டின் பொருளாதார சிக்கன நடவடிக்கைகளில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளின் கடைசிச் சொட்டு ரத்தத்தையும் உறிஞ்சும் வகையிலான வரி இது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கி பல மக்கள் நலத் திட்டங்களுக்கு முன்னாள் அதிபர் சர்கோசி வேட்டு வைக்க நொந்து போன பிரான்சு மக்கள் சோஷலிஸ்டான பிரான்சுவா ஹோலண்ட் அதிபராக வந்தால் எல்லாம் சரியாகும் என்று அழுகிய அமைப்பிற்குள் மாற்று தேடியதின் வலி இன்று போலி சோசலிஸ்டான ஹோலண்ட் மக்கள் நலத் திட்டங்களின் வெட்டை வேகமாக்கி வருகிறார். கட்சிக்கு சோசலிசம் எனப் பெயர் வைத்திருந்தால் சோசலிஸ்ட் கிடையாது. இதை புரிந்து கொள்ள வேண்டும், இந்தியாவிலும் சிபி எம், சிபிஐ-யை கம்யூனிஸ்டுகள் என்று சொல்வது போலான மூட நம்பிக்கை இது.
முதலாளித்துவ விசுவாசியும், போலி சோசலிஸ்ட்டும், பன்னாட்டு நிதியத்தின் கைப்பிள்ளையும், ஐரோப்பிய ஒன்றியத்தின் அடியாளுமான அதிபர் பிரான்சுவா ஹோலண்டின் அரசு புதிதாக கண்டுபிடித்த் வரி தான் இந்த சுற்றுச்சூழல் வரி.
அதாவது விவசாயிகளின் விளை பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் சுற்றுச் சூழலை கெடுத்து விடுகின்றன, அதை சீர் செய்ய விவசாயிகள் வரி கட்ட வேண்டும். ஆனால் ஹோலண்ட் எக்காரணம் கொண்டும் லாப வெறிக்காக சுற்றுச் சூழலை அழிக்கும் முதலாளிகள் மீது இந்த மாதிரியான வரியை போட முடியாது, மாறாக வருமான வரியையோ, சுங்க வரியையோ தள்ளுபடி செய்யும் திட்டங்களை வகுப்பார். அரசின் மக்கள் விரோதத் தன்மையை புரிந்து கொண்ட பிரித்தானியா மக்கள் வீதிகளில் இறங்கினார்கள்.
சுற்றுச்சூழல் வரி அதிபர் ஹோலண்டிற்கு கல்லறை கட்டிவிட்டது என்று போராடும் மக்கள் கருத்து தெரிவித்தனர். அரசின் கணக்குப்படி 10 ஆயிரம் பேரும், போராட்டக்காரர்களின் கணக்கின் படி 30 ஆயிரம் பேர் வரையும் ஆர்ப்பாட்டத்துக்கு திரண்டிருந்தனர். 1675-ல் கடும் வரி விதித்த பதினாலாவது லூயி மன்னனுக்கு எதிராக பிரித்தானிய மக்கள் தலையில் சிவப்புத் தொப்பியை அணிந்து போராடியது போல் விவசாயிகள், விவசாயத் துறை தொழிலாளர்கள், மீனவர்கள் அடங்கிய போராட்டக்காரர்களில் பலர் சிவப்பு தொப்பி அணிந்து வந்திருந்தார்கள்.
ஒருங்கிணைப்பாளரின் பேச்சுக்காக மக்கள் காத்திருந்த இருந்த போது நிலவரம் கலவரமாக மாறியது. போலிசார் கண்ணீர் புகைக் குண்டு வீசி போராட்டக்காரர்களை தக்க, பதிலுக்கு மக்களும் போலிசை தாக்கத் தொடங்கினர். மக்களின் இந்த போராட்டம் அரசை நடுங்கத் தான் செய்திருக்கிறது. அரசு தற்காலிகமாக சுற்றுச்சூழல் வரியை ரத்து செய்திருக்கிறது, ஆனால் அதே நேரம் போராடிய மக்களை கண்டித்திருக்கும் அதிபர், சுற்றுச்சூழல் வரி தற்காலிகமாகத் தான் நிறுத்தப்படுகிறது, நீக்கப்படவில்லை என மீசை முறுக்கியுள்ளார்.
பிரெஞ்சு புரட்சியை உலகிற்கு தந்த மக்கள், பாட்டாளிகளாக ஒன்றுபட்டால் முதலாளித்துவ கட்சிகளை விரட்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. செ

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக