CHENNAI: It had all the makings of a viral tweet. It mentioned a "rumour" about Kalanithi Maran's Sun Group buying the home-grown restaurant chain Hotel Saravana Bhavan.
சென்னை: ரூ 5200 கோடிக்கு, தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி நிறுவன அதிபருக்கு கைமாறியது ஓட்டல் சரவண பவன்... - இப்படி ஒரு தகவலை ஒரு வாரப்பத்திரிகை வெளியிட்டு விட, எங்கும் அதே பேச்சாகக் கிடக்கிறது. தமிழகத்திலும் வெளிநாடுகளிலும் இந்திய உணவுகளுக்கு பிரபலமான பெயர் சரவண பவன். ஓட்டல் என்றால் எப்படி இருக்க வேண்டும், சுவை, சுகாதாரம் எப்படி காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்கு சரவண பவன் ஒரு சான்று. இந்த ஓட்டலுக்கு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கிட்டத்தட்ட 80 கிளைகள் உள்ளன. சென்னை தவிர, காஞ்சிபுரம், வேலூர், திருச்செந்தூர், டெல்லி போன்ற இடங்களில் நேரடி கிளைகள் உள்ளன. வெளிநாடுகளில் அமெரிக்கா, மலேசியா, சிங்கரப்பூர், துபாய், கனடா உள்பட 20 நாடுகளுக்கும் மேல் இதன் கிளைகள் உள்ளன. இந்த நிறுவனம் பற்றி அவ்வப்போது ஏதாவது பரபரப்பு வந்து கொண்டே இருக்கும். இந்த முறை ஓட்டலே கைமாறிவிட்டதாக செய்தி கிளம்பியுள்ளது. ரூ 5200 கோடிக்கு ஓட்டல் கைமாறியுள்ளதாகவும், இதனை பிரபல டிவி சேனல் அதிபர் கைப்பற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு வரை இதே பெயரில் ஓட்டல் தொடரும் என்றும், அதன் பணியாளர்களில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்கையில், எங்களுக்கு எதுவும் தெரியாது என ஓட்டல் நிர்வாகிகள் கூறிவிட்டனர். சரவண பவன் அதிபர் ராஜகோபாலின் மகன் வெளியூரில் இருப்பதால், அவர் வந்த பிறகே எதுவும் பேச முடியும் என்றனர்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக