வெள்ளி, 15 நவம்பர், 2013

5 மாநில தேர்தல் நேரத்தில் ராகுல் கிரிகெட்டு பார்த்து கொண்டிருக்கிறார் ! மேட்டு குடி கலாச்சாரம்

டெல்லி: லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் 5 மாநில சட்டசபைக்கான பிரசாரத்தை ஓரம்கட்டி வைத்துவிட்டு மும்பையில் சச்சின் டெண்டுல்கர் ஆடிய கடைசி டெஸ்ட் போட்டியை கண்டு ரசித்தார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. டெல்லி, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் களைகட்டி வருகிறது. சத்தீஸ்கரில் முதல் கட்ட வாக்குப் பதிவு முடிந்து 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சத்தீஸ்கரில் நேற்று ஒரேநாளில் பல இடங்களில் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரசாரம் செய்தார். அப்போது ராகுல் காந்தியை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார் மோடி. சத்தீஸ்கர் மாநில அரசுக்கு ஒதுக்கிய நிதி என்ன உங்கள் மாமா வீட்டில் இருந்தா வருகிறது? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியும் பதிலடி கொடுத்தது. குஜராத் மாநில வளர்ச்சிக்கான பணம் என்ன உங்கள் தாத்தா வீட்டில் இருந்தா வந்தது? என்று காங்கிரஸ் பதிலடி கொடுத்து. இப்படி அரசியல் களம் செம சூடாக இருக்கும் நிலையில் இதற்கு பதில் சொல்ல வேண்டிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியோ மும்பை வாங்கடே மைதானத்தில் டெண்டுல்கரின் கடைசி டெஸ்ட் போட்டியை கண்டு ரசித்தார். சச்சின் டெண்டுல்கர் 200வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் நேற்று விளையாடத் தொடங்கினர். இன்று 2வது நாளும் அவர் விளையாடி 74 ரன்களில் அவுட் ஆனார். 2ம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் ராகுல் காந்தி ஸ்டேடியத்திற்கு வந்து சச்சின் விளையாட்டை ரசித்தார். முன்னதாக ஒரு பேட்டியில், சச்சினின் 200 வது டெஸ்ட் ஆட்டத்திற்கு வாழ்த்து கூறிய ராகுல், சச்சின் எனது நண்பர் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: