திருமலை: திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பாபி ராஜு அளித்த
பேட்டி:மும்பையில் ஏழுமலையான் கோயில் கட்டுவதற்காக, 200 கோடி மதிப்புள்ள 8
ஏக்கர் நிலத்தை பக்தர் ஒருவர் தானமாக வழங்குவதோடு, தேவஸ்தானம் சார்பில்
அங்கு கோ யில் கட்டுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதற்கு 200 கோடி
மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கும் நீங்கள், 10 கோடி செலவு செய்து கோயில்
கட்டிக் கொள்ளலாமே என்று தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு,
அவர் கோயில் கட்டுவதற்கான செலவை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதை திருப்பதி
தேவஸ்தானம்தான் நிர்வகிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண் டார். ஏனுங்க மக்களின் பணத்தில் இயங்கும் பொது ஸ்தாபனம் மக்களுக்கு பதில் சொல்ல பயப்படுவது ஏன் ?
இதுகுறித்து, அடுத்த அறங்காவலர் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்படும். தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு தேவஸ்தானம் பதில் தெரிவிப்பதில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை. கேரள உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் தேவஸ்தானத்துக்கு பொருந்தாது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், தேவஸ்தானம் சார்பில் அரசிடம் இருந்து எந்த நிதியும் பெறுவதும் இல்லை; அரசுக்கு வழங்குவதும் இல்லை. எனவே, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தேவஸ்தானம் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். dinakaran.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக