சனி, 16 நவம்பர், 2013

ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடித்த இந்திய நடிகர் திடீர் தற்கொலை Actor Goutam paul bhattacharjee

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperலண்டன்:ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்த இந்திய வம்சாவளி நடிகர், இங்கிலாந்தில் வங்கி கடனை திரும்ப செலுத்த முடியாமல் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்டார்.இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் கவுதம் பவுல் பட்டாச்சார்ஜி (53). இவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மனைவி எம்மா மெக்குடன் வசித்தார். டிவி நாடகங்களிலும், திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கினார். டேனியல் கிரைக் ஜேம்ஸ் பாண்டாக நடித்து 2006ல் வெளியான கேசினோ ராயல் படத்தில் டாக்டர் வேடத்தில் கவுதம் நடித்தார். அதன்பிறகு ஈஸ்ட் என்டர்ஸ் உள்பட பல்வேறு ஹாலிவுட் படங்களில் நடித்தார்.


இந்நிலையில் கடந்த ஜூலை 10ம் தேதி வீட்டை விட்டு மாயமானார். வயிறு வலிப்பதாக கூறி சென்றார். அதன் பிறகு காணவில்லை என்று அவரது மனைவி எம்மா புகார் தெரிவித்தார். வழக்கம் போல் விடுமுறையை கழிக்க வெளியில் சென்றிருக்கலாம் என நினைத்தனர். மனைவிக்கு இறுதியாக ‘ஐ ஆம் சாரி’ என எஸ்எம்எஸ் ஒன்றை அனுப்பியிருந்தார். அதன்பின் எந்த தொடர்பும் இல்லை.

இந்நிலையில் மாயமான 2 நாட்களுக்கு பிறகு கிழக்கு சசசெக்ஸ் பகுதியில் உள்ள ஸ்பளால் கிளிப் பாய்ன்ட் என்ற சிறிய மலை அடிவாரத்தில் கவுதம் பவுல் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கடந்த ஜூலை 12ம் தேதி இவரது உடலை போலீசார் மீட்டனர். இதுகுறித்து எம்மா கூறுகையில், வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் நோட்டீஸ் வந்துள்ளது. அந்த நோட்டீஸ், கணவர் காணாமல் போன அன்று வீட்டில் இருந்ததை பார்த்தேன். இதனால் அவர் மனமுடைந்து வீட்டை விட்டு சென்றிருக்கலாம் என்று தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதியானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. - tamilmurasu.org

கருத்துகள் இல்லை: