Age is no longer a barrier for corneal donation. The
cornea donated by a one-year-old was transplanted to a 65-year-old
resident of Avadi at Dr. Agarwal’s Eye Hospital in the city.
Using
a relatively new technique — Pre Descemet’s Endothelial Keratoplasty
(PDEK), wherein a few corneal layers are used and not the entire cornea —
doctors restored M. Shanmugam’s eyesight.
சென்னை, நவ.10- சென்னை ஆவடியைச் சேர்ந்த
சண்முகத்துக்கு (65), இறந்த ஒரு வயது குழந்தையின் கண் விழியை புதிய
தொழில்நுட்ப முறையில் பொருத்தி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை உலக சாதனை
படைத்துள் ளது.
உலகிலேயே முதன் முறையாகச் செய்யப்
பட்டுள்ள ப்ரீ டெஸி மெட்ஸ் எண்டோதீலி யல் கேரடோப் ளாஸ்டி (பிடிஈகே) என்ற
இந்தப் புதிய கண் விழிப்படல மாற்று சிகிச்சை குறித்து டாக்டர் அகர்வால் கண்
மருத்துவமனைத் தலை வர் டாக்டர் அமர் அகர் வால் செய்தியாளர்களி டம்
சனிக்கிழமை கூறி யதாவது:-
நாம் பார்ப்பதற்கு உதவுபவை கரு விழியின்
முன்புறம் உள்ள கார் னியா எனப்படும் ஒளி ஊடுருவக் கூடிய மெலிதான விழி வெண்
படலமாகும். இந்த விழி வெண்படலத்தில் ஏ, பி, சி, டி, இ என மொத்தம் 5
திசுக்கள் (லேயர்கள்) உள்ளன.
இந்தியாவை பூர்வீக மாகக் கொண்ட இங்கி
லாந்தைச் சேர்ந்த கண் மருத்துவப் பேராசிரியர் துவா, விழி வெண்பட லத்தில் சி
லேயருக்கும் டி லேயருக்கும் முன்பாக ஒரு புதிய லேயர், அதா வது 6 ஆவதாக ஒரு
லேயர் இருப்பதைக் கண்டுபிடித்தார். விழி வெண்படலத்தின் உள்ளே உள்ள இந்த
லேயர், பார்வைத் திற னுக்கு உரிய முக்கியத் திசுவாகும். இதுவரை வழக்கமாகச்
செய்யப் பட்டு வந்த கண் விழி மாற்று சிகிச்சையில், இறந்தவரிடமிருந்து
பெறப்படும் கண்ணின் விழி வெண்படலம் (கார் னியா) முழுவதும் அகற் றப்பட்டு,
தேவைப்படு வோருக்குப் பொருத்தி பார்வை அளிக்கப்படு கிறது.
பேராசிரியர் துவா கண்டுபிடித்துள்ள
பிடிஈகே தொழில்நுட்ப அடிப்படையிலான கண் மாற்று சிகிச்சை யில் விழி
வெண்படலத் தின் (கார்னியா) பாதிக் கப்பட்ட திசு மட்டும் அகற்றப்பட்டு, அந்த
இடத்தில் கொடை யாகப் பெறப்படும் கண்ணின் கார்னியாவின் அதே திசு மட்டுமே
பொருத்தப்படுகிறது. இதனால் பார்வைத் திறன் நன்றாக இருப்ப தோடு,
எதிர்காலத்தில் புதிய விழி வெண்படலத் திசுவை, கொடை பெற் றவர் கண் விழி வெண்
படலத்தை நிராகரிக்கும் வாய்ப்பு மிகமிகக் குறைவாக இருக்கும்.
ஆவடியைச் சேர்ந்த 65 வயதான சண்முகத் தின்
இடது கண் விழி வெண்படலத்தில் குறிப் பிட்ட டி திசு மட்டும்
பாதிக்கப்பட்டிருந்ததால், இந்த நவீன சிகிச்சை முறையில் இதய நோயால் இறந்த
ஒரு வயது குழந்தையின் விழி வெண்படலம் கொடை யாகப் பெறப்பட்டு, குழந்தையின்
குறிப் பிட்ட திசு மட்டும் பொருத்தப்பட்டது.
இந்த நவீன கண் மாற்று சிகிச்சை சென்னை
டாக்டர் அகர் வால் கண் மருத்துவ மனையில் கடந்த அக் டோபர் 23 ஆம் தேதி
வெற்றிகரமாகச் செய்யப் பட்டது.
இப்போது சண் முகத் தின் பார்வைத் திறன்
நன்றாக உள்ளது. இந்த நவீன தொழில் நுட்ப முறையில் 16 பேர் கண் மாற்று
சிகிச்சை செய்து கொண்டு இது வரை பலன் அடைந் துள்ளனர் என்றார் டாக்டர் அமர்
அகர் வால்.viduthalai.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக