வியாழன், 14 நவம்பர், 2013

ஏற்காட்டில் அமைச்சர்கள் வாகனங்களுக்கு சோதனை இல்லை ! எங்கே போய்விட்டார் பிரவீன் குமார் ? போயஸ் கார்டனுக்கா ?

சேலம்:"ஏற்காடு இடைத்தேர்தலை ஒட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள, சோதனை சாவடிகளில், பாரபட்சமின்றி எல்லோரது வாகனங்களையும், சோதனைக்கு உட்படுத்திய பிறகே அனுப்பி வைக்க வேண்டும்' என, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. ஆனால், சேலம். உடையாப்பட்டி செக்போஸ்டில், அணிவகுத்து வந்த அமைச்சர்களின் கார்களை, நேற்று, சோதனை செய்யாமலேயே அனுப்பி வைத்த கூத்து அரங்கேறியது. ஆனால், போலீஸார் சல்யூட் அடிக்காமல் அனுப்புகின்றனர் என, அ.தி.மு.க.,வினர் கமெடி செய்தனர்.ஏற்காடு இடைத்தேர்தல், டிச.,4ல் நடப்பதால், சேலம் மாவட்டத்தின் ஒட்டுமொத்த அரசு எந்திரமும், அதிகாரிகளும், தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டு வளையத்தில் கொண்டு வந்து, நடத்தை விதிகள் அமல்படுத்தப்படுகிறது. சட்டத்தின் ஆட்சி இல்லை அம்மாவின் ஆட்சி ...எனது அரசு..... நான் ஆணையிடுகிறேன் ..நான் நான் எனது எனது ,,,....
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அக்.,4ம் தேதி முதல், பிரகடனம் செய்யப்பட்ட நடத்தை விதிகள், டிச.,11ம் தேதி வரை அமலில் இருக்கும். தேர்தல் விதிகள் முறையாக பின்பற்றப்படுவதை கண்காணிக்க, தேர்தல் அலுவலகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தேர்தல் நடத்தை விதி அதிகாரிகள் குழு நான்கு, நிலை கண்காணிப்புக்ழு ஏழு மற்றும், 13 பறக்கும்படை அமைக்கப்பட்டு, தேர்தல் விதிகள் கண்காணிக்கப்படுகிறது. வாகனங்களை சோதனைக்கு உட்படுத்த மாவட்டத்தில், 33 செக் போஸ்ட் உள்ளது. மாவட்ட எல்லை முழுவதும் சீலிடப்பட்டுள்ளது. போலீஸார், மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் வருவாய்துறையினர் கூட்டாக இணைந்து, வாகன சோதனை பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தேர்தலுக்காக, பிரத்யேகமாக அமைக்கப்பட்ட செக்போஸ்டில், உடையாப்பட்டி செக்போஸ்டும் ஒன்று.சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த செக்போஸ்டில், நிமிடத்துக்கு, 10 வாகனங்கள் கடந்து செல்லும் அளவுக்கு வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. செக்போஸ்டை கடந்து செல்லும், எல்லா வாகனங்களையும், தீவிர சோதனைக்கு உட்படுத்திய பிறகே அனுப்பி வைக்க வேண்டும் என்பது தேர்தல் நடத்தை விதி.

ஆனால், கட்சி வாகனங்களை, முழு அளவில் இல்லாமல், பெயரளவில் மட்டுமே போலீஸார் சோதனை செய்து அனுப்புகின்றனர். கட்சி சாராத வாகனங்கள் மட்டுமே, போலீஸ் சோதனை வளையத்தில் சிக்கி, படாத பாடு பட்டு, நீண்ட நேரம் காத்திருந்து செல்கிறது. பெரும்பாலான அரசியல் கட்சி வாகனங்களை, போலீஸார் கண்டுகொள்ளவே இல்லை. அயோத்தியாப்பட்டணத்தில், நேற்று, அ.தி.மு.க., சார்பில், இடைத்தேர்தல் தலைமை அலுவலகம் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வேட்பாளர் சரோஜா, வேட்பு மனு தாக்கல் செய்த பின், அனைத்து அமைச்சர்களும், தேர்தல் அலுவலக திறப்பு விழாவுக்கு புறப்படனர். அனைவரும் ஒரே நேரத்தில், காரில் புறப்பட்டு சென்றால், தேர்தல் வீதி மீறிலாக கருதப்படும். எனவே, அனைவரும், பகல், 1.30 மணிக்கு, விழாவுக்கு வரும்படி தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து, தங்கியிருந்த சொகுசு ஹோட்டலுக்கு திரும்பிய அமைச்சர்கள், பகல், 12.30 மணி முதல், ஒவ்வொருவராக, தங்கள் படைபரிவாரங்களுடன் காரில் அணிவகுத்து, அயோத்தியாப்பட்டணம் புறப்பட்டனர். அதனால், உடையாப்பட்டி செக் போஸ்ட் பரபரப்பானது.மூன்று முதல் ஐந்து வாகனங்கள் வரை பின்தொடர, அமைச்சர்கள், செக் போஸ்டை கடந்து சென்றனர். கருப்பு நிற கண்ணாடியால், காருக்குள் இருக்கும் அமைச்சர் யார் என்பது தெரியவில்லையென்றாலும், அமைச்சர் கார் என்பதை உறுதி செய்து கொண்ட போலீஸார், அதை தடுத்து சோதனை செய்யாமல், போக்குவரத்து இடயூறு இன்றி, அவர்கள் வாகனங்களை வழி அனுப்பி வைத்தனர்.

இதேபோல, அனைத்து அமைச்சரின் வாகனங்களும், சில நிமிட இடைவெளிவிட்டு, அடுத்தடுத்து, ஐந்து வாகனங்கள் வரை பின்தொடர, அயோத்தியாபட்டணம் சென்றடைந்தனர். அமைச்சர்கள் முதல், அவருடன் வந்த பரிவாரங்களின் வாகனங்கள் ஒன்றை கூட போலீஸார் சோதனை செய்யவில்லை.அப்போது அப்பகுதியில் நின்றிருந்த சில, அ.தி.மு.க.,வினர், "சல்யூட் அடிக்காமல் அமைச்சர் வாகனங்கள் அனுப்பி வைக்கின்றனர்' என, போலீஸாரிடம், அ.தி.மு.க.,வினர் கூறியது உச்ச கட்ட காமெடி.அதே நேரம் பொது மக்கள் சென்ற கார்கள், குறைந்தது, 10 நிமிடமாவது சோதனை செய்த பின்னர் தான் அனுப்பப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அனைவருக்கும் பொதுவானது தான். ஆனால், நேற்று அமைச்சர்கள் வாகனங்கள் சோதனை செய்யப்படாமல் அனுப்பப்பட்டது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து, மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளர் சிவலிங்கம் கூறியதாவது: தேர்தல் விதியை, காற்றில் பறக்கவிட்டு, அ.தி.மு.க.,வில் நிர்வாகிகள் முதல் அமைச்சர்கள் வரை கூடுதல் வாகனங்கள் புடைசூழ பவனி வருவதை, அதிகாரிகளும், போலீஸாரும் கண்டுகொள்வதே இல்லை. இது தொடர்பாகவும், தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்ப உள்ளோம், என்றார். அமைச்சர் கார்களை கண்டுகொள்ளாமல் வழி அனுப்பி வைத்த, கண்காணிப்பு அதிகாரிகள் மீது, மாவட்ட தேர்தல் அலுவலரும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியும் நடவடிக்கை எடுக்க வேண்டும். dinamalar.com

கருத்துகள் இல்லை: